உலக காசநோய் விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு கோவில்பட்டியில் காசநோய் விழிப்புணர்வு நாடகம்...







தேசிய காசநோய் ஒழிப்பு திட்டம் மற்றும் கடம்பூர் காசநோய் பிரிவின் சார்பாக உலக காசநோய் வாரத்தை முன்னிட்டு கோவில்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் காசநோய் விழிப்புணர்வு நாடகம் நடைபெற்றது.
பள்ளித்தலைமையாசிரியை ஜெயலதா வரவேற்றுப் பேசினார்.
நிகழ்ச்சிக்கு தலைமையேற்று பேசிய மாவட்ட தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் கமலவாசன் பேசுகையில் காசநோய் என்பது காற்றின் மூலமாக பரவக்கூடிய நோய் என்றும் காசநோயின் அறிகுறிகள் பற்றி தெளிவாக எடுத்துக்கூறினார்.
மாணவிகள் தங்கள் வீட்டின் அருகே எவரேனும் காசநோய் அறிகுறிகளுடன் எவரேனும் தென்பட்டால் மருத்துவமனைக்கு செல்வதற்கு அறிவுறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார் மேலும் காசநோய் விழிப்புணர்வு நாடகத்தில் நடித்த மாணவிகளை பாராட்டி பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன.
கோவில்பட்டி அரசு மருத்துவமனை காசநோய் பொறுப்பு மருத்துவர் வினோதினி ஆகியோர் மற்றும் மாவட்ட காசநோய் மையம் சார்பில் மாரியப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர்..
முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் காசி விஸ்வநாதன் மற்றும் முதுநிலை ஆய்வுகூட மேற்பார்வையாளர் தனசெல்விசோபியா , சுகாதார பார்வையாளர்கள் மகேஷ், திவ்யா ஆகியோர் கலந்து கொண்டனர்.
அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் 600க்கும் மேற்பட்டோர் பள்ளி ஆசிரியைகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவிகளுக்கு மருத்துவர் கமலவாசன் புத்தகங்கள் வழங்கினார்.
இசையாசிரியை அமலபுஷ்பம் தொகுத்து வழங்கினார்.
தமிழாசிரியை கெங்கம்மாள் நன்றி கூறினார்
நிகழ்ச்சி ஏற்பாடுகளை முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் காசி விஸ்வநாதன் மற்றும் பள்ளி நிர்வாகத்தினர் ஏற்பாடு செய்திருந்தனர்...