கோவில்பட்டி ரோட்டரி கிளப் சார்பாக காசநோயாளிகளுக்கு இலவச ஊட்டச்சத்து வழங்கும் நிகழ்ச்சி...




கோவில்பட்டி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் காசநோயாளிகளுக்கு இலவச ஊட்டச்சத்து வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது
மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் கமலவாசன் தலைமை வகித்து பேசினார்
காசநோயாளிகளுக்கு தேவையான புரதச் சத்து கிடைக்கவேண்டும் என்ற நோக்கத்தில் ரோட்டரி கிளப் இலவச ஊட்டச்சத்து உணவுகளை வழங்கிவருவது குறித்து பாராட்டி பேசினார்
அரசு மருத்துவமனையில் நோயாளியின் எடைக்கு ஏற்றவாறு மாத்திரை வழங்கப்படுகிறது என்று மருத்துவமனை கண்காணிப்பாளர் கமலவாசன் கூறினார் .
கோவில்பட்டி ரோட்டரி கிளப் தலைவர் ரவி மாணிக்கம் காச நோயாளிகளுக்கு இலவச ஊட்டச்சத்து களை வழங்கினார் .
இந்த நிகழ்ச்சியில் ரோட்டரி கிளப் செயளாளர் மணிகண்ட மூர்த்தி, ரோட்டரி கிளப் உறுப்பினர்கள் கிருஷ்ணசாமி, மாரியப்பன் சுகாதார பார்வையாளர்கள் சுப்புலட்சுமி, மகேஷ் மேலும் ஆய்வக நுட்புனர்கள் ராஜகுமாரி,இசக்கியம்மாள் ஆகியோர் கலந்து கொண்டனர்
கோவில்பட்டி மாவட்ட துணை ஆளுநர் ஆசியா.பார்ம்ஸ் பாபு நன்றி கூறினார்
நிகழ்ச்சி ஏற்பாடுகளை கடம்பூர் காசநோய் பிரிவின் முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் காசி விஸ்வநாதன் ஏற்பாடு செய்திருந்தார்