கோவில்பட்டி ரோட்டரி சங்கத்திற்கு முதல்வர் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் பாரட்டுசான்றிதழ்
கோவில்பட்டி ரோட்டரி சங்கத்திற்கு முதல்வர் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் பாரட்டுசான்றிதழ் வழங்கப்பட்டது.

தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தின் கீழ் *காசநோய் இல்லா தமிழகம்-2025* எனும் இலக்கை அடைய அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றது. அதன் ஒரு பகுதியாக, தமிழகத்தில் காசநோயாளிகளுக்கு ஊட்டச்சத்து பொருட்களை வழங்கிவரும் சிறந்த 100 தொண்டு நிறுவனங்களை தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு, சென்னை நொச்சிகுப்பத்தில் நடைபெற்ற *மாண்புமிகு முதல்வர்* தலைமையிலான நடந்த நிகழ்ச்சியில் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கபட்டது.
இந்நிகழ்ச்சியில், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் கடந்த 14 ஆண்டுகளுக்கு மேலாக காசநோயாளிகளுக்கு, ஊட்டச்சத்து பொருட்களை சேவையாக வழங்கி வரும் கோவில்பட்டி ரோட்டரி கிளப்பிற்கு
வழங்கப்பட்டது.
அதன் சார்பாக, ரோட்டரி சங்க முன்னாள் துணை ஆளுநரும் ,இலவச சத்துணவு திட்ட ஒருங்கிணைப்பாளருமான திரு. விநாயகம் ரமேஷ் அவர்களுக்கு பாராட்டு சான்றிதழை மாண்புமிகு சுகாதார துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் அவர்கள் வழங்கினார்கள்.
இந் நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட துணை இயக்குநர் (காசம்) க.சுந்தரலிங்கம் அவர்கள் ரோட்டரி சங்கத்தின் சேவையை பாராட்டி பேசினார் .
பாராட்டு சான்றிதழ் பெற்ற திரு.விநாயகம் ரமேஷ் கூறுகையில், காசநோய் இல்லாத கோவில்பட்டி உருவாகும் வரை சிகிச்சை பெறும் அனைத்து காசநோயாளிகளுக்கும் ரோட்டரி சங்கம் சார்பில் உதவி செய்வோம் என்று உறுதியளித்தார்.
தூத்துக்குடி மாவட்டம் சார்பில் அரசு மற்றும் தனியார் துறை ஒருங்கிணைப்பாளர் திரு.மோகன் மற்றும் செல்லப்பா ஆகியோர் கலந்து கொண்டனர்.