கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் காசோயாளிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி...




தேசிய காசநோய் ஒழிப்பு திட்டம் மற்றும் கடம்பூர் காசநோய் பிரிவின் சார்பாக கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் காச நோயாளிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் இலவச ஊட்டச்சத்து வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சி பங்கேற்று பேசிய காசநோய் சிறப்பு மருத்துவர் வினோதினி காசநோயாளிகளுக்கு மாத்திரை நோயாளிகளின் எடைக்கு தகுந்தாற்போல் வழங்கப்படுகிறது எனவே நோயாளிகள் சிகிச்சை காலம் முழுவதும் தவறாமால் மாத்திரை எடுத்துக்கொள்ளவேண்டும் என்று கூறினார் . சர்க்கரை நோயாளிகளுக்கு காசநோய் பரவும் தன்மை 30%உள்ளதாக கூறினார்
கோவில்பட்டி ரோட்டரி கிளப் சார்பாக நோயாளிகளுக்கு 100 முட்டைகள் மற்றும் பயறு வகைகள் ஆகியவற்றை வழங்கினார் .
இந்த நிகழ்ச்சியில் முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் காசி விஸ்வநாதன், சுகாதார பார்வையாளர்கள் திருமதி.சுப்புலட்சுமி, மகேஷ் மற்றும் ஆய்வகநுட்புனர் திருமதி லட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர்
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில்பட்டி ரோட்டரி கிளப் இலவச சத்துணவு திட்ட ஒருங்கிணைப்பாளர் விநாயகா ரமேஷ் மற்றும் முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் காசி விஸ்வநாதன் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்