top of page

கோவில்பட்டி நகர்புற பகுதிகளில் காசநோய் கண்டறியும் முகாம்...





கோவில்பட்டி நகர்புற பகுதிகளில் காசநோய் கண்டறியும் முகாம்

தேசிய காசநோய் ஒழிப்பு திட்டம் மற்றும் கடம்பூர் காசநோய் பிரிவின் சார்பாக கோவில்பட்டி வள்ளுவர் நகரில் உள்ள சமுதாய நலக்கூட்டத்தில் காசநோய் கண்டறியும் முகாம் நடைபெற்றது

வள்ளுவர் நகர் கவுன்சிலர் திருமதி.சுதாகுமாரி சிந்தன் தலைமை வகித்து தொடங்கி வைத்தார்

காசநோய் அறிகுறிகள் உள்ள நபர்களுக்கு சளி பரிசோதனை மற்றும் எக்ஸ்ரே பரிசோதனை செய்யப்பட்டது .சளி மாதிரிகள் கோவில்பட்டி அரசு மருத்துமனை ஆய்வுகூடத்திற்கு அனுப்பிவைக்கபட்டது ஆய்வுக மேலும் முகாமில் கலந்து கொண்ட அனைவருக்கும் ரத்த பரிசோதனை மற்றும் உயர் ரத்த அழுத்த பரிசோதனை போன்றவை பரிசோதிக்கப்பட்டது சுகாதார பணியாளர்கள் வீடு வீடாக சென்று காசநோய் அறிகுறிகள் உள்ள நபர்களை அழைத்துவந்து பரிசோதனை செய்தனர்

இந்த நிகழ்ச்சியில் சமூக ஆர்வலர் சிந்தன் மற்றும் அரசு மற்றும் தனியார் துறை ஒருங்கிணைப்பாளர் மோகன்(காசம்) தெற்கு புதுக்கிராமம் எட்டாவது வார்டு கவுன்சிலர் சுரேஷ் குமார் மற்றும் நகர்ப்புற சுகாதார செவிலியர்கள் ராஜேஸ்வரி, மகாலட்சுமி, லலிதா ,சுசிலா மற்றும் முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் சரவணன் , முதுநிலை ஆய்வுகூட மேற்பார்வையாளர் தனசெல்வி சோபியா சுகாதார பார்வையாளர் மகேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர் இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கடம்பூர் காசநோய் பிரிவின் முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் காசி விஸ்வநாதன் ஏற்பாடு செய்திருந்தார்

32 views0 comments
bottom of page