கோவில்பட்டி பகுதியில் நடமாடும் டிஜிட்டல் எக்ஸ்ரே வாகனம் மூலம் காசநோய் கண்டறியும் முகாம்...





தேசிய காசநோய் ஒழிப்பு திட்டம் மற்றும் கடம்பூர் காசநோய் பிரிவின் சார்பாக குருவிநத்தம் பஞ்சாயத்து பகுதிகளான இலந்தைபட்டி மற்றும் குருவிநத்தம் ஆகிய ஊர்களில் காசநோய் கண்டறியும் முகாம் நடைபெற்றது
குருவிநத்தம் கோவில் வளாகத்தில் காசநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது இதில் பொதுமக்களுக்கு காசநோய் அறிகுறிகள் பற்றி தீர்வு முறைஅமைப்பாளர் ச.குப்புசாமி அவர்கள் தெளிவாக எடுத்துக் கூறினார் , காசநோயால் உடலில் ஏற்படும் பாதிப்புகள் பற்றி பேசினார் பின்னர் அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் காசநோய் பணியாளர்கள் வீடு வீடாக சென்று ஒவ்வொரு நபர்களுக்கும் காசநோய் அறிகுறிகள் உள்ளனவா என்பதை கேட்டறிந்தனர் அறிகுறிகள் தென்படும் நபர்ககளுக்கு சளி மாதிரிகள் பெறப்பட்டது பின்னர் நடமாடும் இலவச டிஜிட்டல் எக்ஸ்ரே மூலமாக காசநோய் பரிசோதனை செய்யப்பட்டது
மேலும் இந்த நிகழ்ச்சியில்
மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் சந்தான சங்கர்வேல், முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் காசி விஸ்வநாதன்,
நுண்கதிர் வீச்சாளர் கிறிஸ்டி , முதுநிலை ஆய்வுகூட மேற்பார்வையாளர் தனசெல்வி சோபியா, சுகாதார பார்வையாளர் திவ்யா பஞ்சாயத்து தலைவர் மரியசூசை அந்தோனி ஊராட்சி செயலாளர் பொன்மாடசாமி, சாமி ,ஆய்வகநுட்புனர் முருககுமார் (தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு துறை, ஓட்டுநர் செல்லப்பா, பணித்தள பொறுப்பாளர் சகாய மேரி ஆகியோர் கலந்து கொண்டனர் . பஞ்சாயத்து தலைவர் மரியசூசை அந்தோனி சாமி காசநோய் பணியாளர்களை பாராட்டி நன்றி தெரிவித்தார்
இந்நிகழ்சிக்கான ஏற்பாடுகளை கடம்பூர் காசநோய் பிரிவின் முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் காசி விஸ்வநாதன் மற்றும் பஞ்சாயத்து தலைவர் மரியசூசை அந்தோனி சாமி ஏற்பாடு செய்திருந்தார்