top of page

கோவில்பட்டி மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் காசநோயாளிகளுக்கு ஊட்டச்சத்து வழங்கும் நிகழ்ச்சி









காசநோயாளிகள் அனைவரும் கரோனோ பரிசோதனை செய்வது அவசியம் துனை இயக்குநர் வலியுறுத்தல்...


தேசிய காசநோயகற்றும் திட்டம் கடம்பூர் காசநோய் பிரிவு மற்றும் கோவில்பட்டி ஜே.சி.ஜ சார்பில் காசநோயாளிகளுக்கு ஊட்டச்சத்து வழங்கும் நிகழ்ச்சி கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் நடைபெற்றது கோவில்பட்டி ஜே.சி.ஜ சார்பில் ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கபட்டது ஊட்டச்சத்து பொருட்கள் வழங்கி கோவில்பட்டி ஜே.சி.ஜ தலைவர் முரளி கிருஷ்ணன் சிறப்புரையாற்றினார்


தலைமைவகித்து பேசிய துணை இயக்குநர் சுந்தரலிங்கம் பேசுகையில் காசநோயாளிகள் மாத்திரை சாப்பிடும் காலத்தில் சத்தான உணவுகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்றார் அதிலும் புரத சத்து நிறைந்த தானிய வகைகளை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் காசநோயாளிகள் வீட்டில் உள்ள அனைவரும் காசநோய் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் கூறினார் மேலும் சர்க்கரை நோயாளிகளுக்கு காசநோய் வரும் வாய்ப்பு அதிகம் உள்ளதாக தெரிவித்தார்


கரோனோ தொற்றுக்கும் காசநோய் தொற்றுக்கும் ஒரே மாதிரியான அறிகுறிகள் காணப்படுவதால் காசநோயாளிகள் கரோனோ பரிசோதனை செய்வது மிக அவசியம் என்று கூறினார் காசநோய் தொடர்பான கேள்விகளுக்கு 1800 11 666 உதவி மைய எண்னை அழைக்கவும் என்றார்


அரசு மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனையில் காசநோய்க்கு சிகிச்சை பெறும் அனைத்து நோயாளிகளிக்கும் சிகிச்சை காலத்தில் நோயாளியின் வங்கி கணக்கில் ஒவ்வொரு மாதமும் ரூபாய் 500 செலுத்தபடுவதையும் கூறினார் 2019ஆம் ஆண்டு 2265 நோயாளிகளுக்கு 6086500 ரூபாய் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது என்று கூறினார் சத்துணவு பெட்டகம் வழங்கிய ஜே.சி.ஜ நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்தார்


முன்னிலை வகித்து பேசிய மாவட்ட தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் கமலவாசன் கோவில்பட்டி ரோட்டரி கிளப் சார்பாக காசநோயாளிகளுக்கு தினம் தோறும் இலவச சத்துணவு‌ பணிரெண்டு ஆண்டுகளாக வழங்கபட்டுவருவதாக கூறினார் கரோனோ அறிகுறிகள் தென்பட்டால் கரோனோ பரிசோதனையுடன் காசநோய் பரிசோதனையும் செய்யபடுகிறது என்று கூறினார்


மாவட்ட நலக்கல்வியாளர் தங்கவேல் வரவேற்று பேசினார் இந்நிகழ்ச்சியில் நிலைய மருத்துவ அலுவலர் பூவேஸ்வரி நெஞ்சக நோய் சிறப்பு மருத்துவர் சீனிவாசன் ,சமூக தணிக்கை வட்டார வள அலுவலர் முத்து முருகன், அரசு மற்றும் தனியார் துறை ஒருங்கிணைப்பாளர் மோகன்(காசம்)ஜே.சி.ஜ திட்ட இயக்குநர் விஜய கண்ணன் ஜே.சி.ஜ முன்னால் தலைவர்கள் ஆசியா பார்ம்ஸ் பாபு,லட்சுமி விக்னேஷ் நடராஜன் (வேளாண்மை துறை) , முதுநிலை காசநோய் ஆய்வக மேற்பார்வையாளர் தன செல்வி சோபியா , சுகாதார பார்வையாளர் சகாயாராணி ஆய்வக நுட்புநர் ராஜகுமாரி , ராமலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர்


முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் காசி விஸ்வநாதன் நன்றி கூறினார்

5 views0 comments
bottom of page