top of page

கோவில்பட்டி ஸ்ரீராம் நகர் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் காசநோயாளிகளுக்கு ஆலோசனை முகாம்







தேசிய காசநோயகற்றும் திட்டம் கடம்பூர் காசநோய் பிரிவின் சார்பாக கோவில்பட்டியில் காசநோய்க்கு மாத்திரை உண்பவர்களுக்கு ஆலோசனை முகாம் ஸ்ரீராம் நகர் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்றது இக் கூட்டத்திற்கு மருத்துவ அலுவலர் கெளசிக்சுந்தர் தலைமை வகித்து பேசியதாவது


காசநோய் முற்றிலும் குணப்படுத்த கூடிய நோய் ஆறுமாத காலம் தொடர்ந்து மாத்திரை உட்கொள்ள வேண்டும் காசநோய் காற்றின் மூலம் பரவுவதால் வீட்டில் உள்ள அனைவரும் காசநோய் பரிசோதனை செய்வது மிகவும் அவசியம் என்று வலியுறுத்தினார் மேலும் புரதம் சார்ந்த பயறு வகைகளை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்ள வேண்டும் என்று கூறினார்


காசநோயாளிகள் வீட்டில் ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகள் இருப்பின் அவர்களுக்கு காசநோய் பரிசோதனை செய்யவேண்டும் என்றார் கூறினார்


மேலும் காசநோயாய் சம்பந்தமான நோயாளிகளின் கேள்விகளுக்கு பதில் கூறினார்


இக்கூட்டத்தில் முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் காசி விஸ்வநாதன், மருந்தாளுனர் திவ்யா, ஆய்வக நுட்புநர் ரோஸ்லின், தொற்றா நோய் பிரிவு செவிலியர் கிருபா ஆகியோர் கலந்து கொண்டனர்


இக் கூட்டத்திற்கான ஏற்பாடுகளை முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் காசி விஸ்வநாதன் ஏற்பாடு செய்திருந்தார்

16 views0 comments
bottom of page