கோவில்பட்டி நகர்ப்புற பகுதிகளில் காசநோய் கண்டறியும் முகாம்




தமிழகத்தில் காசநோய் கண்டறியும் முகாம் 14-12-2020 முதல் 24-12-202020 வரை நடைபெற்று வருகிறது இதன் ஒரு பகுதியாக தேசிய காசநோயகற்றும் திட்டம் தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் காசநோய் பிரிவின் சார்பாக ஜோதிநகர்,நடராஜபுரம் பகுதிகளில் துணை இயக்குநர் மருத்துவ பணிகள் டாக்டர் சுந்தரலிங்கம் அவர்களின் ஆலோசனையின் பேரில் கோவில்பட்டி நகர்ப்புற வீடு வீடாக சென்று காசநோய் கண்டறியும் முகாம் நடைபெற்றுவருகிறது இதில் காசநோய் பணியாளர்கள் மற்றும் K.R கல்லூரி NSS மாணவர்கள் கலந்து கொண்டு ஆய்வு மேற்கொண்டனர்
காசநோய் அறிகுறிகள் தென்படும் நபர்களுக்கு சளி மற்றும் எக்ஸ்ரே(X-Ray) மூலம் பரிசோதனை செய்யப்படுகிறார்கள் சளி பரிசோதனையானது அதிநவீன சிபினாட் எனப்படும் கருவி மூலமாக கண்டறியப்படுகிறது , சர்க்கரை நோயாளிகள் மற்றும் உயர் ரத்த அழுத்தம் உள்ள நபர்கள் அதிகமாக பரிசோதனை மேற்கொண்டனர்
இந் நிகழ்ச்சியில் மாவட்ட நலக்கல்வியாளர் (காசம்) தங்கவேல் முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் காசி விஸ்வநாதன் முதுநிலை ஆய்வுகூட மேற்பார்வையாளர் தன செல்வி சோபியா, சுகாதார பார்வையாளர் திவ்யா,சமூக ஆர்வலர் முத்து முருகன் கோவில் பட்டி ரோட்டரி சங்க செயலாளர் கண்ணன் நகர்ப்புற சுகாதார செவிலியர் லலிதா ஆகியோர் கலந்து கொண்டனர்
இந்த நிகழ்ச்சிக்காக ஏற்பாடுகளை முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் காசி விஸ்வநாதன் ஏற்பாடு செய்திருந்தார்