கோவில்பட்டியில் உலக காசநோய் விழிப்புணர்வு வார நிகழ்ச்சி...





தேசிய காசநோய் ஒழிப்பு திட்ட கடம்பூர் காசநோய் பிரிவு',கோவில்பட்டி ரோட்டரி சங்கம் ஆகியவை சார்பில் உலக காசநோய் விழிப்புணர்வு வாரம் கோவில்பட்டி நகர் நல மையத்தில் வைத்து கடைபிடிக்கப்பட்டது
நாடு முழுவதும் பிப்ரவரி 17 முதல் 23 வரை உலக காசநோய் விழிப்புணர்வு வாரம் கடைபிடிக்கப்படுகிறது.கோவில்பட்டி நகர்நல மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 60க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காச நோயை அறவே ஒழித்து காசநோய் இல்லாத உலகத்தை உருவாக்கிடவும்,மற்ற நோயைப் போல காசநோயும் கிருமியால் வரக்கூடிய ஒரு நோய்தான் என்பதால் காசநோயாளிகளை துச்சமாக எண்ண மாட்டேன் எனவும்,காச நோயாளிகளை ஒதுக்கி வைக்காமல் அன்புடன் அரவணைத்து ஆறுதல் அளித்து காசநோய் ஒழிப்பதற்கான எனது போராட்டத்தை துரிதப்படுத்தி காச நோய் இல்லா உலகத்தை 2025க்குள் உருவாக்கிட உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.காசநோய் குறித்து நடைபெற்ற விழிப்புணர்வு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு திருக்குறள் புத்தகம் பரிசாக வழங்கப்பட்டது. காசநோய் குறித்து விழிப்புணர்வு அளிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்குகோவில்பட்டி நகர் நல மைய மருத்துவ அலுவலர் ராமமூர்த்தி தலைமை வகித்து காசநோய் தடுக்கும் முறைகள் குறித்து விளக்கி பேசினார்.
.ரோட்டரி சங்க செயலாளர் கண்ணன், முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் காசி விஸ்வநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.நகர் நல மையம் மருந்தாளுநர் மகராசி அனைவரையும் வரவேற்றார்.
ரோட்டரி மாவட்ட துணை ஆளுநர் நாராயணசாமி கலந்துகொண்டு காசநோய் விழிப்புணர்வு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு திருக்குறள் புத்தகங்களை பரிசாக வழங்கி பேசினார்..
இந்நிகழ்ச்சியில் ரோட்டரி சங்க நிர்வாகிகள் முத்து முருகன்,காளியப்பன்.நடராஜன்.நகர் நலமைய செவிலியர்கள் பூமாலை, சுதா, சகுந்தலா தேவி ,ஆய்வக நுட்புனர் செல்வி உள்பட பலர் கலந்து கொண்டனர்.முடிவில் நகர் நல மைய செவிலியர் தனலட்சுமி நன்றி கூறினார்