கொட்டாரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டம்...
கொட்டாரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.




விழாவிற்கு மருத்துவ அலுவலர் டாக்டர்.ஆயிஷா சித்திகா தலைமை தாங்கினார். சித்த மருத்துவ அலுவலர் டாக்டர்.ராஜஷ்வரன் முன்னிலை வகித்தார்.
வட்டார சுகாதார மேற்பார்வையாளர் மனோகரன் வரவேற்றார்.
விழாவில் மருத்துவமனை ஊழியர்கள் பாரம்பரிய உடையணிந்து ஒற்றுமையோடு சமத்துவ பொங்கலிட்டு கொண்டாடினர். மேலும் மருத்துவமனை ஊழியர்களை உற்சாகப்படுத்தும் விதமாக பல்வேறு பாரம்பரிய போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.
இந்த நிகழ்வில் சமுதாய நல செவிலியர் கௌசல்யா, கிராம சுகாதார செவிலியர்கள், சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் சுகாதாரத் துறை பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் மருந்தாளுநர் இசக்கியப்பன் நன்றி கூறினார்.
ஏற்பாடுகளை மருத்துவமனை ஊழியர்கள் செய்திருந்தனர்.