கொங்கராயகுறிச்சியில் காசநோய் கண்டறியும் சிறப்பு முகாம்...




2025ம் ஆண்டிற்குள் காசநோய் இல்லாத வலிமையான தூத்துக்குடி மாவட்டதை உருவாக்கும் நோக்கத்தோடு துணை இயக்குநர், மருத்துவப் பணிகள் (காசநோய்) டாக்டர்.க.சுந்தரலிங்கம் அறிவுறுத்தலின்போரில், தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் தீவிர காசநோய் கண்டறியும் முகாம் 14ம் தேதி முதல் 24ம் தேதி வரை நடைபெற்று வருகிறது.
இதனடிப்படையில் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர்.மு.சுந்தரி மேற்பார்வையில், தேசிய காசநோயகற்றும் திட்டம் வல்லநாடு காசநோய் பிரிவு சார்பாக ‘காசநோய் கண்டறியும் சிறப்பு முகாம் இன்று கொங்கராயகுறிச்சி கிராமத்தில் வைத்து மருத்துவ அலுவலர் டாக்டர்.கிஷோர் கௌதம் ராஜ் தலைமையில் நடைபெற்றது.
இம்முகாமில் சுகாதார குழுவினர் கொங்கராயகுறிச்சியில் வீடு வீடாக சென்று கணக்கெடுப்பு நடத்தி காசநோய் அறிகுறிகள் உள்ளவர்களுக்கு சளி மாதிரியை சேகரித்து பாரிசோதனை செய்தார்கள். மேலும் இந்த குழுவினர் காசநோய் பாதித்தவர்கள் மேற்கொள்ள வேண்டிய சிகிச்சை முறைகள், காசநோய் வராமல் தடுப்பதற்கான வழிமுறைகள், சுகாதார கல்வி மற்றும் காசநோய் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொது மக்களுக்கு வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.
இம்முகாமில் சுகாதார பார்வையாளர் முத்து லெட்சுமி, மகப்பேறு துணை செவிலியர் பத்மா செவிலியர் சுப்புலக்ஷ்மி, ஆய்வகநுட்பநர் ஜெமிலா, அங்கன்வாடி பணியாளர் கற்பகவல்லி, சுகாதாரத் துறை பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை வல்லநாடு காசநோய் பிரிவு முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் அப்துல் ரஹீம் ஹீரா செய்திருந்தார்கள்.