பரப்பாடி அருகில் சேவன் குளம் கிராமத்தில் ரூபாய் 7 லட்சம் மதிப்பீட்டில் புதிய 25 kva மின்மாற்றி...


தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் திருநெல்வேலி மின் பகிர்மான வட்டம் கிராமப்புற கோட்டத்தில் நாங்குநேரி கிராமப்புற பிரிவுக்கு உட்பட்ட பரப்பாடி அருகில் சேவன் குளம் கிராமத்தில் ரூபாய் 7 லட்சம் மதிப்பீட்டில் புதிய 25 kva மின்மாற்றி 22.08.2022 அன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் செயற்பொறியாளர் கிராமப்புறம் ஜான் பிரிட்டோ உதவி செயற்பொறியாளர்கள் அலெக்சாண்டர், ஜெயசீலன், ஆஷா, உதவி மின் பொறியாளர்கள் அன்பு சரவணன், சிவலிங்கம் ,ஒன்றிய செயலாளர் திரு சுடலைக்கண்ணு, சிங்கநேரி ஊராட்சி தலைவர் சண்முகசுந்தரம், செண்பகராமநல்லூர் ஊராட்சித் தலைவர் முருகம்மாள், மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டார்கள்.
புதிய மின்மாற்றி இயக்கத்திற்கு கொண்டு வந்ததன் மூலம் தரமான மின்சாரம் அப்பகுதி மக்களுக்கு கிடைக்கும்.