கழுகுமலை அருகே வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு...



கழுகுமலை அருகேயுள்ள கரடிகுளம் சின்னக்காலனி தெற்கு தெருவைச் சேர்ந்தவர் கருப்பசாமி மகன் சாலமன்(45). கழுகுமலை மசூதி அருகே இன்வெர்ட்டர் பேட்டரி கடை நடத்தி வருகிறார். இவர், நேற்று தனது குடும்பத்தினருடன் வீட்டை பூட்டிவிட்டு, வீட்டு சாவியை கதவுக்கு அருகேயுள்ள ஆணியில் தொங்க விட்டுவிட்டுச் சென்றுள்ளார். இதற்கிடையில் மதியம் வீட்டுக்கு வந்தபோது வீட்டின் கதவு திறந்த நிலையில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர், உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 3 பவுன் தங்கச்செயின், அரை பவுன் மோதிரம் மற்றும் அரை பவுன் கம்மல் திருடு போயிருப்பது தெரியவந்தது. இதனை தொடர்;ந்து சாலமன் கழுகுமலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவர் அளித்த புகாரின் பேரில், கழுகுமலை போலீஸார் வழக்குப்பதிந்து, வீட்டின் கதவை உடைத்து தங்கநகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.