top of page

கழுகுமலை பகுதியில் அதிநவீன"சிபிநாட்" கருவி மூலமாக காசநோய் கண்டறியும் முகாம்











தமிழகம் முழுவதும் 14-12-2020முதல் 24-12-2020 வரை காசநோய் கண்டறியும் முகாம் நடைபெற்றுவருகிறது இதன் ஒரு பகுதியாக தேசிய காசநோயகற்றும் திட்டம் தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் காசநோய் பிரிவின் பிரிவின் சார்பாககாசநோய் துணை இயக்குநர் மருத்துவ பணிகள் டாக்டர் சுந்தரலிங்கம் அவர்களின் ஆலோசனையின் பேரில் கழுகுமலை பகுதியில் அண்ணாபுதுத்தெரு மற்றும் கல்லூரணி ஆகிய இடங்களில் வீடு வீடாக சென்று காசநோய் கண்டறியும் பணி நடைபெற்றது


இந் நிகழ்ச்சிக்கு கழுகுமலை அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் சண்முகபிரியா தலைமை வகித்தார் காசநோய் பரவும் தன்மை பற்றி எடுத்துக் கூறினார் மற்றும் பொதுமக்களுக்கு பொது சுகாதார பற்றியும் எடுத்துக் கூறினார்


காசநோய் அறிகுறிகள் தென்படும் நபர்களுக்கு சளி மாதிரிகள் வாங்கப்பட்டு இரண்டு மணி நேரத்தில் காசநோய் கண்டறியும் அதி நவீன கருவியான "சிபினாட்" மூலம் கோவில்பட்டியில் கண்டறியப்படுகிறது


மேலும் காசநோயால் பாதிக்கப்பட்டு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு குணமடைந்தவர்களுக்கு மீண்டும் காசநோய் அறிகுறிகள் உள்ளனவா என்று கேட்டறிய பட்டது


காசநோய் கண்டறியும் பணியில் காசநோய் பணியாளர்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்


இந் நிகழ்ச்சியில் முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் காசி விஸ்வநாதன் , முதுநிலை ஆய்வுகூட மேற்பார்வையாளர் தன செல்வி சோபியா, சுகாதார ஆய்வாளர்கள் ராஜேந்திரன், காளிராஜ், சுகாதார பார்வையாளர் திவ்யா பஞ்சாயத்து தலைவர் இசக்கியம்மாள் ஆகியோர் கலந்து கொண்டனர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் காசி விஸ்வநாதன் ஏற்பாடு செய்திருந்தார்

15 views0 comments