கயத்தாரில் அங்கன்வாடி பணியாளர்களுக்கு காசநோய் கண்டறியும் முகாம்...


தேசிய காசநோயகற்றும் திட்டம் கடம்பூர் காசநோய் அலகின் சார்பாக அங்கன்வாடி பணியாளர்களுக்கு காசநோய் கண்டறியும் முகாம் கயத்தார் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகத்தில் நடைபெற்றது

குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் தாஜீன்னிசா பேகம் தலைமையில் நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் அங்கன்வாடி உதவியாளர்களுக்கு காசநோய் கண்டறியும் முகாமானது சளி பரிசோதனை மற்றும் நடமாடும் டிஜிட்டல் எக்ஸ்ரே வாகனம் மூலமாக காசநோய் பரிசோதனை செய்யப்பட்டது மேலும் இந்த முகாமில் கலந்து கொண்ட அனைவருக்கும் இரத்த பரிசோதனை மற்றும் , ரத்த அழுத்த பரிசோதனை,எச்.ஐ.வி. ஆகியவையும் பரிசோதனை செய்யப்பட்டது நிகழ்ச்சியில் கயத்தாறு வட்டார அங்கன்வாடி பணியாளர்கள் அனைவரும் பங்கேற்றனர்

இந்த நிகழ்ச்சியில் மோகன் அரசு மற்றும் தனியார் துறை ஒருங்கிணைப்பாளர் (காசம் தூத்துக்குடி)

முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் காசி விஸ்வநாதன், முதுநிலை ஆய்வுகூட மேற்பார்வையாளர் தனசெல்வி சோபியா, சுகாதார பார்வையாளர் திவ்யா,முருககுமார் (தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு துறை)நுண்கதிர் வீச்சாளர் முத்துபிரியா, இடைநிலை சுகாதார பணியாளர் சங்கரி, மற்றும் பெண் சுகாதார தன்னார்வலர்கள் மஞ்சுஷா மற்றும் கனகலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர்

இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கடம்பூர் காசநோய் பிரிவின் முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் காசி விஸ்வநாதன் ஏற்பாடு செய்திருந்தார்

மேற்பார்வையாளர் பாலசரஸ்வதி நன்றி கூறினார்

129 views0 comments