top of page

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே காசநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி...







தூத்துக்குடி மாவட்டம் தேசிய காசநோயகற்றும் திட்டம் மற்றும் *கடம்பூர் காசநோய் பிரிவின் சார்பாக* கயத்தாறு அருகே *ராஜாபுதுக்குடி* கிராமத்தில் நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் *முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் காசி விஸ்வநாதன்* காசநோய் அறிகுறிகள் மற்றும் காசநோயால் பாதிக்கபடுவோரின் உடல்நிலை பற்றி எடுத்துக் கூறினார் கழுத்துப்பகுதி மற்றும் முதுகு பகுதியில் ஏற்படும் காசநோய் பற்றி தெளிவாக எடுத்துரைத்தார் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் முககவசம் அணிவதால் காசநோய் வராமல் தற்காத்துக்கொள்ள லாம் என்று கூறினார்


*சுகாதார ஆய்வாளர் பெரியசாமி* புரதம் சார்ந்த உணவுகளை எடுத்துக் கொள்வதன் அவசியம் பற்றி எடுத்துக் கூறினார் வெயில் காலங்களில் தினசரி உணவில் எடுத்துக் கொள்ளவேண்டிய உணவு வகைகளை பற்றி பேசினார்



*இடைநிலை சுகாதார பணியாளர் அகிலா* பேசுகையில் சர்க்கரை நோயாளிகளுக்கு காசநோய் பரவும் வாய்ப்பு அதிகம் உள்ளது எனவே சர்க்கரை நோயாளிகள் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடிவடிக்கை பற்றி கூறினார்


*அங்கன்வாடி பணியாளர்* *ஏஞ்சல் ராணி* காசநோய் உறுதிமொழியை முன்மொழிய ஊர் மக்கள் காசநோய் உறுதியேற்று கொண்டனர்


*இந்நிகழ்ச்சியில் சுகாதார ஆய்வாளர் மோகன்* *மற்றும் சுகாதார பணியாளர் இசக்கியம்மாள் மற்றும் ஊர் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்*

நிகழ்ச்சிக்காக ஏற்பாடுகளை முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் காசி விஸ்வநாதன் ஏற்பாடு செய்திருந்தார்

13 views0 comments
bottom of page