top of page

கயத்தாறு அருகே அகிலாண்டபுரத்தில் காசநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி

கயத்தாறு அருகே காசநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி





தூத்துக்குடி மாவட்டம் தேசிய காசநோயகற்றும் திட்டம் மற்றும் *கடம்பூர் காசநோய் பிரிவின் சார்பாக* கயத்தாறு அருகே அகிலாண்டபுரம் சமுதாய நலக்கூடத்தில் நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் *முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் காசி விஸ்வநாதன்* காசநோய் அறிகுறிகளான இரண்டு வாரத்திற்கு மேற்பட்ட இருமல்,சளி , மாலைநேர காய்ச்சல் ,எடை குறைதல் போன்ற *காசநோய் அறிகுறிகளையும்,முககவசத்தின் முக்கியத்துவம் பற்றி விளக்கமாக கூறினார் மேலும் காசநோய்* *_பரிசோதனை முறைகள் பற்றி தெளிவாக எடுத்துக் கூறினார்._* சர்க்கரை நோயாளிகளுக்கு காசநோய் பரிசோதனை செய்யப்பட்டது


அகிலாண்டபுரம் பஞ்சாயத்து துணைத் தலைவர் பால்ராஜ் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் பற்றி எடுத்து கூறினார் எனவே பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த கூடாது என்று அறிவுறுத்தினார்




முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் காசி விஸ்வநாதன் *காசநோய் உறுதிமொழியை முன்மொழிய* *பொதுமக்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் காசநோய் உறுதிமொழி* *எடுத்துக்கொண்டணர்* பஞ்சாயத்து துணைத் தலைவர் காசநோய் விழிப்புணர்வு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினார்


இந்த நிகழ்ச்சியில் இடைநிலை சுகாதார பணியாளர் சரண்யா மற்றும் மஞ்சு ஆகியோர் கலந்து கொண்டனர்

நிகழ்ச்சியை முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் காசி விஸ்வநாதன் ஏற்பாடு செய்திருந்தார்.

22 views0 comments
bottom of page