கயத்தார் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் காசநோயாளிகளுக்கு ஆலோசனை முகாம்...





தேசிய காசநோயகற்றும் திட்டம் கடம்பூர் காசநோய் பிரிவின் சார்பாக கோவில்பட்டியில் காசநோய்க்கு மாத்திரை உண்பவர்களுக்கு ஆலோசனை முகாம் கயத்தார் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்றது. துணை பெண் செவிலியர் பரமேஸ்வரி அனைவரையும் வரவேற்றார் மருத்துவ அலுவலர் திலகவதி தலைமை வகித்து பேசியதாவது
காசநோய் முற்றிலும் குணப்படுத்த கூடிய நோய் ஆறுமாத காலம் தொடர்ந்து மாத்திரை உட்கொள்ள வேண்டும் காசநோய் காற்றின் மூலம் பரவுவதால் வீட்டில் உள்ள அனைவரும் காசநோய் பரிசோதனை செய்வது மிகவும் அவசியம் என்று வலியுறுத்தினார் மேலும் புரதம் சார்ந்த பயறு வகைகளை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்ள வேண்டும் என்று கூறினார்
காசநோயாளிகள் வீட்டில் ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகள் இருப்பின் அவர்களுக்கு காசநோய் பரிசோதனை செய்யவேண்டும் என்றார் கூறினார்
காசநோய் பாதித்த நபர்கள் கண்டிப்பாக வீட்டில் இருக்கும் போதும் முககவசம் அணிவது மிக அவசியம் என்று வலியுறுத்தினார் பொதுமக்களிடம் காசநோய் அறிகுறிகளுடன் எவரேனும் தென்பட்டால் அவர்களை மருத்துமனைக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொண்டார்
மருத்துவ அலுவலர் இலக்கியா பேசுகையில் காகநோயாளிகள் கொரனோ தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என்றார் காசநோயாளிகள் முககவசம் மிகவும் அவசியம் என்று கூறினார்
சுகாதார ஆய்வாளர் விஜயகுமார் பொது சுகாதாரம் பற்றி எடுத்துக் கூறினார்
இந்த ஆலோசனை முகாமில் காசநோயாளிகள் முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் காசி விஸ்வநாதன், தொற்றா நோய் செவிலியர் சங்கீதா ஆகியோர் கலந்து கொண்டனர்
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை காசி விஸ்வநாதன் செய்திருந்தார்