புதிய காவல் சோதனைச் சாவடி கட்டிடம் அடிக்கல்நாட்டு விழா...


திருநெல்வேலி மாவட்ட எல்லைப் பகுதியான பணகுடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காவல் கிணறு விலக்கில் காவல் துறையினரின் சோதனைச்சாவடி பல வருடங்களாக செயல்பட்டு வருகிறது. இச்சோதனை சாவடியை கடந்து தான் திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து கன்னியாகுமரி மாவட்டத்திற்கு செல்ல வேண்டும். இதனால் 24 மணிநேரமும் சுழற்சி முறையில் காவல்துறையினர் பணி செய்து வருகின்றனர். தற்போது உள்ள சோதனை சாவடி கட்டிடம் பழுதாகி உள்ள நிலையில் புதிய கட்டிடம் கட்ட *திருநெல்வேலி மாவட்ட காவல் திரு.நெ.மணிவண்ணன் இ.கா.ப.,* அவர்கள் அரசுக்கு பரிந்துரை செய்தார்.


இதன்பேரில் பழைய சோதனைச்சாவடி கட்டிடத்தை அகற்றி அதே இடத்தில் புதிய கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. *இந்நிகழ்ச்சியில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் திரு.விஷ்ணு அவர்கள், திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.நெ.மணிவண்ணன் இ.கா.ப., அவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஞானதிரவியம் அவர்கள், மற்றும் வள்ளியூர் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் திரு.சமய் சிங் மீனா,இ.கா.ப., அவர்கள் கலந்து கொண்டு கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டுவிழாவை தொடங்கி வைத்தனர்.*


இந்நிகழ்ச்சியில் காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

4 views0 comments