top of page

இராமானுஜம்புதூரில் கலைஞரின் வரும் முன் காப்போம் திட்ட முகாம்...




கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட முகாம் கருங்குளம் அருகே உள்ள இரானுஜம்புதூர் கிராமத்தில் நடைபெற்றது.

முகாமிற்கு கருங்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் அலுவலர் டாக்டர்.முருகேஸ்வரி தலைமை தாங்கினார். மருத்துவ அலுவலர்கள் டாக்டர்.கிருஷ்ணஜோதி, டாக்டர் ஜெயவாணி, டாக்டர்.ரதி ஆகியோர்கள் முன்னிலை வகித்தார்கள்.


சுகாதார ஆய்வாளர் ஸ்ரீனிவாசன் அனைவரையும் வரவேற்று பேசினார்.

முகாமினை இராமானுஜம்புதூர் ஊராட்சி மன்றத் தலைவர் *திரு. ஸ்ரீ ரங்கன்* அவர்கள் துவக்கி வைத்தார்.

இராமானுஜம்புதூர் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் திரு.கணபதி, டி.வி.எஸ் சேவைகள் அறக்கட்டளையின் கள இயக்குனர் திரு.விஜயகுமார் ஆகியோர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்கள்.


இம் முகாமில் பொது மருத்துவம், அறுவை சிகிச்சை, சித்த மருத்துவம், பல் மருத்துவம், கண் மருத்துவம், தோல் நோய், காசநோய், எச்ஐவி/எய்ட்ஸ், தொற்றா நோய் உள்ளிட்டவைக்கு சிறப்பு மருத்துவர்கள் அடங்கிய குழு மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது.

டிவிஎஸ் சேவைகள் அறக்கட்டளையின் சமூக மேம்பாட்டு அலுவலர் திரு.பிரகாஷ் அவர்கள் நன்றி கூறினார்.


முகாமில் முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் அப்துல் ரஹீம் ஹிரா,

சுகாதார ஆய்வாளர்கள் பிரசாத், அக்‌சிலின்

கிராம சுகாதார செவிலியர்கள், நம்பிக்கை மைய ஆற்றுப்படுத்துனர், ஆய்வகநுட்பனர்கள், சுகாதாரத்துறை பணியாளர்கள் மற்றும் டி.வி.எஸ் சேவைகள் அறக்கட்டளையின் கிராம வளர்ச்சி அலுவலர் திரு. பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டார்கள்.


24 views0 comments
bottom of page