கல்லிடைக்குறிச்சி கோட்டம், தமிழாக்குறிச்சி பகுதியில் ரூபாய் 5,20,800 செலவில் புதிய மின்மாற்றி...

திருநெல்வேலி மின் பகிர்மான வட்டம், கல்லிடைக்குறிச்சி கோட்டம், சேரன்மகாதேவி உபகோட்டம், கோபாலசமுத்திரம் பிரிவில் நாங்குநேரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 11kv பெத்தானியா பீடரில் தமிழாக்குறிச்சி பகுதியில் ரூபாய் 5,20,800 செலவில் ஏற்கெனவே உள்ள மின்மாற்றியின் குறைந்த மின்னழுத்தத்தை சரிசெய்து நுகர்வோர்களுக்கு தடையில்லா , தரமான மின்விநியோகம் செய்வதற்காக ஐந்து நாட்களில் புதிய 25 KVA மின்மாற்றி அமைத்து கல்லிடைக்குறிச்சி செயற்பொறியாளர் திரு . சுடலையாடும் பெருமாள் அவர்கள் உத்தரவின்படி சேரன்மகாதேவி உதவி செயற்பொறியாளர் மகேஷ்சுவாமிநாதன்,அவர்கள் ஆலோசனையின்படிஉதவி பொறியாளர் திரு. இரா.இருளாண்டி மற்றும் மின்வாரிய பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.