கல்லிடைக்குறிச்சி கோட்டம் பொட்டல்புதூரில் ரூபாய் 7,65,280 செலவில் இரண்டு புதிய மின்மாற்றிகள்.



திருநெல்வேலி மின் பகிர்மான வட்டம், கல்லிடைக்குறிச்சி கோட்டம், விக்கிரமசிங்கபுரம் உபகோட்டம், ஆழ்வார்குறிச்சி பிரிவில் ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி உட்பட்ட 11kv பொட்டல்புதூர் பகுதியில் ரூபாய் 7,65,280 செலவில் ஏற்கெனவே உள்ள மின்மாற்றியின் கூடுதல் மின்பளுவை குறைப்பதற்காகவும் நுகர்வோர்களுக்கு தடையில்லா , தரமான மின்விநியோகம் செய்வதற்காக இரண்டு புதிய 25 KVA மின்மாற்றி கள் அமைத்து கல்லிடைக்குறிச்சி செயற்பொறியாளர் திரு . சுடலையாடும் பெருமாள் அவர்கள் உத்தரவின் பேரில் விக்கிரமசிங்கபுரம் உதவி செயற்பொறியாளர் திரு இராமகிளி அவர்களால் இயக்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ,உதவி பொறியாளர்கள் திரு விஜயராஜ், மகேந்திரன் மின்வாரிய பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.