top of page

திருநெல்வேலி - களக்காடு அருள்மிகு கோமதி அம்பாள் சமேத சத்தியவாகீஸ்வரர் திருக்கோயில் தெப்பத் திருவிழா










வீடியோ ... https://youtu.be/-CYrsj0XEUM

திருநெல்வேலி மாவட்டத்தில் பாடல் பெற்ற சைவ வைணவ தலங்கள் ஏராளமாய் அமைந்திருக்கின்றன அதில் களக்காடு அருள்மிகு சத்தியவாகீஸ்வரர் திருக்கோயில் ஒன்றாகும்.

இத்திருக்கோயில் பச்சை ஆற்றின் கரையில் அமைந்துள்ளது கிபி 640ல் வீரமார்த்தாண்டடவர்மன் என்ற மன்னனால் கட்டப்பட்டது இறைவன் புன்னை மரத்தடியில் தோன்றியதால் புன்னைவன நாதர் என்றும் இறைவி கோமதி அம்பாள் என்றும் வணங்கப்பட்டனா்.

முப்புரத்து அசுரர்கள் சிவ பூஜையை மறக்கும் படி செய்த நாரதரும் திருமாலும் கண்ணிழந்து இத்தலத்திற்கு வந்து புன்னைவன நாதர் ஐ நோக்கி தவம் புரிந்து கண் பெற்றனர் புன்னைவன நாதர் சத்திய வாக்கு அருளியதால் சத்தியவாகீஸ்வரர் என்ற திருநாமத்துடன் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகின்றார் .

இத்திருக்கோவிலில் 135 அடி உயரமுள்ள ஒன்பது நிலை ராஜகோபுரம் சிறப்பாக அமைந்துள்ளது இதில் சிறப்பு என்னவென்றால் இந்த ராஜகோபுரத்தின் நிழல் தரையில் விழுவதில்லை .

மேலும் கர்ப்பக்கிரக மணிமண்டபத்தில் 16 தூண்கள் என இரண்டு புறமும் தூண்கள் அமையப்பெற்றது தூண்களில் நாத ஓசை வருகின்றது

இந்து தர்மத்தில் மானிடரின் பாவ புண்ணிய கணக்குகளை எழுதும் சித்திர புத்திர நயினாருக்கு இத்திருக்கோயிலில் தனி சன்னதி அமைந்துள்ளது சிறப்பு.

புவியியல் சம இரவு பகல் நாட்கள் எனக்கூறப்படும் மார்ச் 20 ஒட்டி மூன்று தினங்களும் செப்டம்பர் 22 ஒற்றி மூன்று தினங்களும் சூரிய உதயத்தின் போது சூரிய ஒளி மூலவர் மீது படும் வண்ணம் இத்திருக்கோயில் கட்டப்பட்டுள்ளது கட்டிட கலையின் சிறப்பு

பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இத்திருத்தலத்தில் வருடம் முழுவதும் திருவிழாக்கள் நடந்தாலும் வைகாசி மாதம் வரும் பிரம்மோற்சவம் ஐப்பசியில் அம்பாளுக்கும் திருக்கல்யாண உற்சவமும் தை தெப்ப திருவிழாவும் இத்திருக்கோயிலில் வெகு சிறப்பாக நடைபெறுகிறது

மூன்று தினங்கள் நடக்கும் இந்த தெப்பத் திருவிழாவில் முதல் நாள் சுவாமி சத்தியவாகீஸ்வரர் கோமதி அம்பாள் சிவன் தெப்பமும், இரண்டாம் நாள் ஸ்ரீ வரதராஜ பெருமாள் தெப்ப உற்சவமும் மூன்றாம் நாள் ஸ்ரீ சந்தான கோபால கிருஷ்ண சுவாமி தெப்ப உற்சவமும் இவ்வூரில் நடைபெறுகிறது

தை தெப்ப திருவிழாவின் முதல் நாளான இன்று மாலை சுவாமி அம்பாள் கோவிலிலிருந்து புறப்பட்டு தெப்பத்தின் அருகிலுள்ள மண்டபத்திற்கு எழுந்தருளினார் அங்கு பதினாறு வகையான வாசனை பொருட்களைக்கொண்டு அபிஷேகம் நடைபெற்றது . பின்னர் சுவாமி அம்பாள் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டு அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளினார் சுவாமி அம்பாளுடன் 11 முறை தெப்பம் வலம் வந்தது. முதல் மூன்று சுற்றுகளில் மங்கல இசையும் அடுத்த மூன்று சுற்றுகளில் வேத பாராயணமும் மீதி சுற்றுகள் தமிழ் மறையாம் தேவாரமும் பாடப்பட்டது

நிறைவாக சுவாமி அம்பாளுக்கு கற்பூர ஆரத்தி காட்டப்பட்டு திருக்கோவிலுக்கு எழுந்தருளினார் இந்நிகழ்ச்சியினை ஆயிரக்கணக்கான மக்கள் தரிசனம் செய்தனர்


66 views0 comments