தென்காசி மாவட்டம் - கடையநல்லூர் பகுதியில் 29/03/22 பராமரிப்பு பணி - மின்தடை

தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் கடையநல்லூர் விநியோகம செயற்பொறியாளர்
நாகராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்
கடையநல்லூர் கோட்டத்திற்குட்பட்ட நாரணாபுரம் மற்றும்
விஸ்வநாதபேரி உபமின் நிலையங்களில் 29.03.2022 அன்று காலை 09.00 மணி
முதல் பிற்பகல் 02.00 மணி வரை மாதாந்திர பராமரிப்பு நடைபெறுவதால் கீழ்கண்ட கிராமங்களுக்கு மின் விநியோகம் இருக்காது எனவும்,
மேற்படி கிராமங்களில் மின் கம்பிகளில் தொடும் நிலையிலுள்ள மரக்கிளைகளை
வெட்டுவதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுக்கவேண்டுமென்று கேட்டுக்கொண்டுள்ளார்.
மின்தடை ஏற்படும் ஊர்கள்
நாரணாபுரம் துணை மின்நிலையம்
தரணிநகர், வாசுதேவநல்லூர், சங்கனாபேரி,
திருமலாபுரம், இராமநாதபுரம், கூடலூர்,
சங்குபுரம், கீழபுதூர், நெல்கட்டும்செவல்,
சுப்பிரமணியபுரம், உள்ளார்,
வெள்ளாளங்கோட்டை மற்றும் தாருகாபுரம்.
விஸ்வநாதபேரி துணை மின்நிலையம்
சிவகிரி, தேவிபட்டிணம், விஸ்வநாதபேரி,
தெற்குசத்திரம், வடக்குசத்திரம், வழிவழிகுளம்,
இராயகிரி, மேலகரிசல்குளம், கொத்தாடைப்பட்டி
மற்றும் வடுகபட்டி.