கடம்பூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு காசநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி
துணை இயக்குனர் மருத்துவ பணிகள்(காசம்) க.சுந்தரலிங்கம் அவர்களின் ஆலோசனையின்
பேரில் தேசிய காசநோயகற்றும் திட்டம் கடம்பூர் காசநோய் பிரிவின் சார்பாக கர்ப்பிணி பெண்களுக்கு காசநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி கடம்பூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்றது.




இந் நிகழ்ச்சிக்கு கடம்பூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய *மருத்துவ அலுவலர் அருண் விஸ்வநாத் தலைமை வகித்து பேசியதாவது* காசநோயின் அறிகுறிகள் பற்றி தெளிவாக எடுத்துக் கூறினார் கரனோ போலவே காசநோயும் காற்றின் மூலம் பரவுவம் தன்மை கொண்டது எனவே அனைவரும் முககவசம் அணியவேண்டும் என்று அறிவுறுத்தினார் . கூட்டத்தில் கலந்து கொண்ட கர்ப்பிணி பெண்கள் ஒவ்வொரு பெண்களுக்கும் காசநோய் அறிகுறிகள் உள்ளனவா என்பது பற்றி கேட்டறிந்து கொண்டார் . கர்ப்பிணி பெண்கள் கரனோ தடுப்பூசி செலுத்தி கொண்டார்களா என்பது உறுதி செய்யப்பட்டது
மருத்துவ அலுவலர் *திருமதி.காயத்ரி* பேசுகையில் தினந்தோறும் கர்ப்பிணி பெண்கள் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டிய உணவு முறைகள் பற்றி எடுத்துகூறினார் கர்ப்பிணி பெண்கள் மருத்துவ மனைக்கு பரிசோதனைக்கு எந்தெந்த மாதத்தில் வர வேண்டும் என்று தெளிவாக எடுத்துக் கூறினார். *கோவில்பட்டி ரோட்டரி கிளப் சார்பாக காசநோயாளிக்கு இலவச அரிசி மற்றும் மளிகை பொருட்களை மருத்துவர் காயத்ரி வழங்கினார்*
*மருத்துவ அலுவலர் நந்தினி* காசநோயாளிகளுக்கு அரசு வழங்கும் நலத்திட்டங்கள் பற்றி எடுத்துக் கூறினார் மருத்துவ அலுவலர்கள் கர்ப்பிணி பெண்களுக்கு காசநோய் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார்கள்
இந் நிகழ்ச்சியை பகுதி சுகாதார செவிலியர் *செல்லத்தாய்* வரவேற்றுப் பேசினார் மேலும் இந் நிகழ்ச்சியில் *முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் காசி விஸ்வநாதன்* பெண் துணை செவிலியர் *சகுந்தலா* , ஆய்வக நுட்புனர் *ஸ்டெல்லா மேரி,முருககுமார்* மற்றும் கிராம சுகாதார செவிலியர்கள் கலந்து கொண்டனர் இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் *காசி விஸ்வநாதன் ஏற்பாடு செய்திருந்தார்*
