top of page

கடம்பூரில் உலக காசநோய் எதிர்ப்பு வாரத்தை முன்னிட்டு காசநோய் பற்றிய பேச்சு மற்றும் கட்டுரை போட்டி...











கடம்பூரில் உலக காசநோய் எதிர்ப்பு வாரத்தை முன்னிட்டு காசநோய் பற்றிய பேச்சு போட்டி ‌, மற்றும் கட்டுரை போட்டி


உலக காசநோய் விழிப்புணர்வு வாரம் பிப்ரவரி 17 முதல் 23 வரை உலகமெங்கும் கடைபிடிக்கப்படுகிறது

தேசிய காசநோயகற்றும் திட்டம் தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் காசநோய் பிரிவின் சார்பாக கடம்பூர் இந்து நாடார்கள் மேல்நிலைப்பள்ளி மாணவ , மாணவிகள் காசநோய் பற்றி பேச்சு போட்டியில் பங்கேற்று பேசினார்கள்


இதைத் தொடர்ந்து கட்டுரை போட்டி நடைபெற்றது பேச்சு போட்டி கட்டுரை போட்டியில் வென்றவர்களுக்கு திருக்குறள் புத்தகம் மற்றும் அப்துல் கலாம் எழுதிய அக்னி சிறகுகள் புத்தகம் வழங்கபட்டது


இந் நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமையாசிரியர் ஜெயக்குமார் தலைமை வகித்தார்

முன்னிலை வகித்து பேசிய கடம்பூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் அருண் விஸ்வநாத் மாணவ மாணவிகளிடையே காசநோய் பற்றி எடுத்துக் கூறினார் காசநோய் என்பது முற்றிலும் குணப்படுத்த கூடிய நோய் ஆயினும் மருத்துவர் அறிவுறுத்தும் காலம் வரை மாத்திரை தொடர்ச்சியாக எடுக்க வேண்டும் என்று கூறினார்


காசநோயின் அறிகுறிகள் பற்றி தெளிவாக எடுத்துரைத்தார் காசநோய் காற்றின் மூலம் பரவுவதால் வீட்டின் அருகே எவரேனும் காசநோய் அறிகுறிகள் தென்பட்டால் மருத்துமனைக்கு அனுப்பி வைக்கவேண்டும் என்று கேட்டுக் கொண்டார் காசநோயில்லா தேசத்தை உருவாக்க நாம் அனைவரும் இனைத்து செயல்படவேண்டும் என்றார்


மேலும் உதவி தலைமையாசிரியர் ராமச்சந்திரன் வரவேற்று பேசினார்


ஆசிரியர் சூசைமரியான் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்


சுகாதார ஆய்வாளர்கள் காக்கும் பெருமாள், ரவீந்திரன் முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் காசி விஸ்வநாதன் சுகாதார பார்வையாளர் திவ்யா, கிராம சுகாதார செவிலியர் ஆவுடைத்தங்கம் ஆகியோர் கலந்துகொண்டனர் மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் காசநோய் விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துகொண்டார்கள்


சுகாதார ஆய்வாளர் காக்கும் பெருமாள் நன்றி கூறினார்


நிகழ்ச்சி ஏற்பாடுகளை முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் காசி விஸ்வநாதரன் ஏற்பாடு செய்திருந்தார்

9 views0 comments
bottom of page