கொரோனா நோய்த்தடுப்பு பணியில் முக்கிய பணியாக கபசுர குடிநீர் விநியோகம் ...







திருநெல்வேலி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா நோய்த்தடுப்பு பணியில் முக்கிய பணியாக கபசுர குடிநீர் தினமும் விநியோகிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக நோய்த்தொற்று பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்கள் மூலம் அந்தந்த பகுதிகளில் கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கான ஏற்பாடுகளை திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர் கண்ணன் அவர்கள் உத்தரவின்பேரில் திருநெல்வேலி மாநகராட்சி சித்த மருத்துவர் டாக்டர். அருள்மதி மேலப்பாளையம் மண்டலம் மற்றும் பாளையங்கோட்டை மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளில் கபசுர குடிநீர் வழங்கி வருகிறார்...