திருநெல்வேலி மாநகராட்சி சார்பில் தூய்மைப் பணியாளர்களுக்கு கபசுரக்குடிநீர்...



















திருநெல்வேலி மாநகராட்சி பகுதியில் நோய் தொற்றை தடுக்கும் விதமாக மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் திருநெல்வேலி அரசு சித்த மருத்துவ கல்லூரியில் இருந்து வழங்கப்படும் கபசுரக் குடிநீர், மேலும் தன்னார்வலர்கள் தயாரித்து வழங்கும் கபசுரக் குடிநீர் மண்டலங்களில் பணியாற்றும் கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்கள் மூலமாக நோய் தொற்று அதிகம் உள்ள பகுதிகளுக்கு விநியோகிக்கப்பட்டு அங்கு உள்ள பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது ... நோய் தொற்றைத் தடுக்கும் விதமாக முன் களத்தில் நின்று பணியாற்றும் மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் மற்றும் கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்களுக்கு தினமும் காலையில் உடல் வெப்ப பரிசோதனை செய்யப்படுகிறது. மேலும் அவர்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்படுகிறது.