இருட்டுக்கடை அல்வா அதிபர் ஹரிசிங் அவர்கள் மறைவிற்கு வாடிக்கையாளர்கள் சார்பாக அஞ்சலி...





நெல்லையின் பெருமையாக விளங்கும் இருட்டுக்கடை அல்வா அதிபர் ஹரிசிங் அவர்கள் மறைவிற்கு இருட்டுக்கடை வாடிக்கையாளர்கள் சார்பாக இன்று நெல்லை டவுன் சந்தி பிள்ளையார் முக்கு பகுதியில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சோனா வெங்கடாசலம் சிதம்பர செட்டியார், சங்கரராமன், கவிஞர் பாமணி, அருண்குமார், நமச்சிவாயம் என்ற கோபி, நெல்லை முத்தையா, தென்பத்து கணேசன், வெங்கடசுப்ரமனியன், பாலகிருஷ்ணன், ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர். அல்வா வாங்குவதற்கு கடையில் வரிசையாக நிற்பதுபோல வாடிக்கையாளர்கள் வரிசையாக நின்று அவருக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.
News sponser : https://lapureherbals.in/
