மேலப்பாளையம் அம்பிகாபுரம் ஏ. டி ஆரம்பப் பள்ளியில் 74 வது சுதந்திர தின விழா...


திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையம் அம்பிகாபுரம் ஏ டி
ஆரம்பப் பள்ளியில் இன்று 15.08.2020 இந்திய திருநாட்டின் 74 வது சுதந்திர தின விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.விழாவிற்கு பள்ளியின் செயலர் திரு ச.திருநாவுக்கரசு அவர்கள் தலைமை வகித்தார்.பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு.மு.தங்கராஜ் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் ஜனாப் சிந்தாஷாகு மதார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளியின் செயலர் தேசிய கொடியை ஏற்றி வைத்து சிறப்புரை ஆற்றினார்.அனைவரும் கொடிக்கு மரியாதை செலுத்தினர்.நிகழ்ச்சியில் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு பணியினை மேற்கொண்டு தூய்மைப்பணியாற்றிய சுகாதார ஆய்வாளர் திரு.சங்கரநாராயணன் அவர்களை பள்ளியின் தலைமை ஆசிரியர் பொன்னாடைப் போர்த்தி கௌரவித்தார்.இவ்விழாவில் ஆசிரியர்கள் பெற்றோர் சத்துணவு அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் பள்ளியின் நிர்வாக குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.விழாவில் கலந்து கொண்ட அனைவரும் முககவசம் அணிந்து சமுக இடைவெளியை பின்பற்றினர். அனைவருக்கும் இனிப்பு -லட்டு வழங்கப்பட்டது.முன்னதாக பள்ளியின் தலைமை ஆசிரியர் அனை வரையும் வரவேற்று பேசினார்.நிகழ்ச்சியின் முடிவில் உதவி ஆசிரியர் திருமதி.சுபைதா நன்றி கூற தேசிய கீதத்துடன் விழா இனிதே நிறைவு பெற்றது.