வல்லநாட்டில் காசநோயாளிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நெல்லிக்காய் லேகியம் வழங்கப்பட்டது...
வல்லநாட்டில் காசநோயாளிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நெல்லிக்காய் லேகியம் வழங்கும் நிகழ்ச்சி


தேசிய காசநோயகற்றும் திட்டம் தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு காசநோய் பிரிவு மற்றும் சித்த மருத்துவ பிரிவு இணைந்து நடத்தும் காச நோயாளிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நெல்லிக்காய் லேகியம் வழங்கும் நிகழ்ச்சி இன்று (02.01.2023) வல்லநாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வைத்து வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர்.மு.சுந்தரி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. சித்த மருத்துவ அலுவலர் டாக்டர்.ச.செல்வகுமார் அவர்கள் முன்னிலை வகித்தார்.
வல்லநாடு சித்த மருத்துவ மருந்தாளுநர் திரு.வெங்கடேசன் அவர்கள் அனைவரையும் வரவேற்று பேசினார்.
வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர்.மு.சுந்தரி அவர்கள் காசநோயாளிகளுக்கு நெல்லிக்காய் லேகியம் வழங்கி பேசுகையில், நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு உள்ளவர்களை காற்றின் மூலம் பரவும் காசநோய் எளிதில் தாக்கும். இதன் காரணமாக காசநோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுடைய நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்காக நெல்லிக்காய் லேகியம் வழங்கும் நிகழ்ச்சி சித்த மருத்துவத்துடன் இணைந்து தமிழகத்திலேயே முதல் முறையாக வல்லநாடு காசநோய் பிரிவில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இயற்கையின் எல்.ஐ.சி என அனைவராலும் அழைக்கப்படும் நெல்லி ஒரு காயகற்ப மருந்து தன்மை உடையது. வைட்டமின் "சி" சத்து அதிகம் உள்ளது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தக்கூடியது. சித்த மருத்துவத்தில் வழங்கக்கூடிய திரிபலாவில் நெல்லியும் ஒன்று என கூறினார்கள்.
இறுதியாக முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் திரு.அ.அப்துல் ரஹீம் ஹீரா அவர்கள் நன்றி கூறினார்.
இந்நிகழ்ச்சியில் மருத்துவமனை பணியாளர் திரு.வேம்பன், காசநோயாளிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டார்கள்.
ஏற்பாடுகளை வல்லநாடு காசநோய் பிரிவு மற்றும் சித்த மருத்துவ பிரிவு இணைந்து செய்திருந்தது.
-------------------------------------------------------------------
www.nellaijustnow.com ன் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்....
