வல்லநாட்டில் எச்.ஐ.வி / டி.பி. நோயாளிகளுக்கு சத்துணவு வழங்குதல்...


தேசிய காசநோயகற்றும் திட்டம் தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு காசநோய் பிரிவு சார்பாக எச்.ஐ.வி. மற்றும் டி.பி. நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சத்துணவு வழங்கும் நிகழ்ச்சி வல்லநாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர்.மு.சுந்தரி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
சித்த மருத்துவ அலுவலர் டாக்டர்.செல்வகுமார் அவர்கள் முன்னிலை வகித்தார்.
முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் திரு.அ.அப்துல் ரஹீம் ஹீரா அவர்கள் அனைவரையும் வரவேற்றார்.
வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர்.மு.சுந்தரி அவர்கள் எச்.ஐ.வி டிபியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சத்துணவை அத்துறையை சார்ந்த நம்பிக்கை மைய ஆற்றுப்படுத்துனர் திருமதி.அய்யம்மாள் அவர்களிடம் வழங்கி பேசுகையில்,...
நமது கருங்குளம் வட்டாரத்தில் 41 காசநோயாளிகள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதில் இருவர் மட்டும் டிபியுடன் எச்.ஐ.விக்கும் மருந்து உட்கொண்டு வருகிறார். இவர்களின் ஏழ்மை நிலையினை கருத்தில் கொண்டு வல்லநாடு ஆய்வகநுட்புனர் திருமதி. ராஜேஸ்வரி அவர்கள் வழங்கிய ஒரு மாதத்திற்கு தேவையான சத்துணவு பொருட்கள் இப்போது வழங்கப்பட்டது. ஆய்வக நுட்புனர் திருமதி. ராஜேஸ்வரி அவர்களுக்கு துறையின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்று கூறினார்.
இறுதியாக சித்த மருத்துவ மருந்தாளுநர் திரு.வெங்கடேசன் அவர்கள் நன்றி கூறினார்.
இந்நிகழ்வில் ஆய்வக நுட்பனர் திருமதி.ராஜேஸ்வரி, மருத்துவமனை பணியாளர் திரு.வேம்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை வல்லநாடு காசநோய் பிரிவு முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் திரு.அ.அப்துல் ரஹீம் ஹீரா அவர்கள் செய்திருந்தார்.