வல்லநாட்டில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் சார்பில் காசநோயாளிகளுக்கு சத்துணவு வழங்கப்பட்டது...



தேசிய காசநோய் ஒழிப்பு திட்டம் தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு காசநோய் பிரிவுக்கு உட்பட்ட ஐசோனியசிட் மருந்தெதிற்பு நுரையீரல் காசநோயாளிகளுக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்
சார்பில் புரத சத்து நிறைந்த ஊட்டச்சத்து உணவு பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி வல்லநாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வைத்து இன்று *(03.04.2023)* வட்டார மருத்துவ அலுவலர் *டாக்டர்.மு.சுந்தரி* அவர்கள் தலைமையில் நடைபெற்றது. சித்த மருத்துவ அலுவலர் *டாக்டர்.செல்வகுமார்* அவர்கள் முன்னிலை வகித்தார்.
முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் *திரு.அ.அப்துல் ரஹீம் ஹீரா* அவர்கள் அனைவரையும் வரவேற்றார்.
வட்டார மருத்துவ அலுவலர் *டாக்டர்.மு.சுந்தரி* அவர்கள் *ஐசோனியசிட் மருந்தெதிற்பு நுரையீரல் காசநோயாளிகளுக்கு* புரத சத்து நிறைந்த ஊட்டச்சத்து உணவு வழங்கி பேசுகையில், நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு உள்ளவர்களை காற்றின் மூலம் பரவும் காசநோய் எளிதில் தாக்கும். இதன் காரணமாக காசநோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுடைய நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்காக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் சார்பாக சத்துணவு வழங்கப்படுகிறது என கூறினார்.
இறுதியாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஆய்வக நுட்புனர் *திரு.சந்தான மகாலிங்கம்* அவர்கள் நன்றி கூறினார்.
இந்நிகழ்வில் மருத்துவமனை பணியாளர் திரு.வேம்பன், சுகாதாரத்துறை பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை வல்லநாடு காசநோய் பிரிவு மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் இணைந்து செய்திருந்தது.