கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் காசநோயாளிகளுக்கு சத்துணவு பொருட்கள் வழங்கப்பட்டது.


தேசிய காசநோயகற்றும் திட்டம் கடம்பூர் காசநோய் அலகு மற்றும்
கூடலிங்கம் பட்டுசென்டர் இனணந்து கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் காசநோயாளிகளுக்கு இலவச சத்துணவு வழங்கபட்டது.
நிகழ்ச்சியில் கூடலிங்கம் பட்டுசென்டர் உரிமையாளர் சுதாகர் காசநோயாளிகளுக்கு இலவச சத்துணவு பொருட்களை வழங்கினார்.
தலைமையேற்று பேசிய
துணை இயக்குனர் சுகாதார பணிகள் (காசம்)சுந்தரலிங்கம் பேசும்போது காசநோயாளிகள் புரதம் சார்ந்த உணவுகளை அதிகம் உட்கொள்ள வேண்டும் என்று கூறினார்.
வீட்டில் உள்ள அனைவரும் காசநோய் பரிசோதனை செய்துகொள்வது
அவசியம் என்று கூறினார் மேலும் காசநோயாளிகள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறினார்.
மேலும் இலவச சத்துணவு வழங்கிய
கூடலிங்கம் உரிமையாளரை வெகுவாக பாராட்டி பேசினார்.
சத்துணவு வழங்கி பேசிய கூடலிங்கம் உரிமையாளர் சுதாகர் அனைவரும் சத்துணவு பொருட்களை உட்கொண்டு குணமாகவேண்டும் என்றும், இதுபோன்று நோயாளிகளுக்கு தொடர்ந்து சத்துணவு பொருட்களை வழங்க இருப்பதாக கூறினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை
கண்காணிப்பாளர் கமலவாசன் மற்றும் கோவில்பட்டி அரசு
மருத்துவமனை நிலைய மருத்துவ அலுவலர் பூவேஸ்வரி ஆகியோர் காசநோய் பரவும்விதம் பற்றி கூறினார்கள்.
இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட காசநோய் தீர்வுமுறை அமைப்பாளர் குப்புசாமி, மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் சந்தன சங்கர் வேல், முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் காசி விஸ்வநாதன்,
முதுநிலை ஆய்வுகூட மேற்பார்வையாளர் தனசெல்விசோபியா , சுகாதாரபார்வையாளர் சகாயராணி, மகேஷ் மற்றும் ஆய்வுகூட நுட்புனர் ராஜகுமாரி, ராமலெட்சுமி மற்றும் காசநோயாளிகள் பலரும் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை காசி விஸ்வநாதன் செய்திருந்தார்