சுகாதார பணியாளர்களுக்கு காவல்துறையின் மரியாதை காப்பு அணிவகுப்பு




தமிழகத்தில் முதன்முறையாக திருநெல்வேலி மாநகரில் கொரோனா வைரஸ் தொற்றுக் காலத்தில் உன்னத பணியாற்றி வரும் மாநகராட்சி சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்களை கௌரவப் படுத்தும் வகையில் மாநகர காவல் ஆணையாளர் தீபக் தாமோர் IPS அவர்களின் ஆலோசனையின் பேரில் இன்று (09-04-2020) திருநெல்வேலி மாநகர காவல்துறை சார்பில் “மரியாதை காப்பு அணிவகுப்பு” ( Guard of Honour) மாநகராட்சி ஆணையர் அலுவலகத்தில் அளிக்கப்பட்டது. ஊழியர்கள் சார்பில் மாநகர சுகாதார அலுவலர் சதீஷ் காவலர்களின் அணிவகுப்பு மரியாதையினை ஏற்றுக் கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் கண்ணன் , உதவி ஆட்சியர் (ப) சிவகுரு பிரபாகரன் IAS, காவல் உதவி ஆணையர் சதிஷ்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அணிவகுப்பு மரியாதைக்கான ஏற்பாடுகளை ஆயுதப்படை உதவி ஆணையர் முத்தரசு , ஆய்வாளர் சாது சிதம்பரம் ஆகியோர் செய்திருந்தனர்.
தூய்மைப்பணியாளர்களுக்கான அணிவகுப்பு மரியாதை அவர்களுக்கு ஊக்கமூட்டும் வகையிலும், நெகிழ்ச்சியூட்டும் வகையிலும் அமைந்தது.
என்றும் அன்புடன்
ச. சரவணன்
காவல் துணை ஆணையர்
சட்டம் & ஒழுங்கு
திருநெல்வேலி மாநகரம்