top of page

52 இலட்சம் மதிப்புள்ள 4.87 ஏக்கர் நிலம் மீட்பு - நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு நடவடிக்கை...

ரூபாய் 52 இலட்சம் மதிப்புள்ள 4.87 ஏக்கர் நிலம் மீட்க காரணமாக இருந்த நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு காவல் துறையினர்.





பாளையங்கோட்டை, மகாராஜன் நகரை சேர்ந்த ஜெயந்திரன் V.மணி என்பவருக்கு சொந்தமான இடம் சிவந்திபட்டி, முத்தூர் பகுதியில் 3 ஏக்கர் 26 சென்ட் இடம் உள்ளது. இந்நிலத்தை ஆள்மாறாட்டம் செய்து போலி ஆவணம் மூலம் வேறு ஒருவருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதேபோல் சென்னை, புது வண்ணார்பேட்டை பகுதியைச் சேர்ந்த தீபன் என்பவருக்கு சொந்தமான இடம் ராதாபுரம், சமூகரெங்கபுரம் பகுதியில் 41 சென்ட் இடம் உள்ளது. அந்நிலத்தை ஆள்மாறாட்டம் செய்து போலி ஆவணம் மூலம் வேறு ஒருவருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதேபோல் சென்னை, பழைய வண்ணார்பேட்டை பகுதியைச் சேர்ந்த மணிகண்ட மோகன் என்பவருக்கு சொந்தமான இடம் ராதாபுரம், சமூகரெங்கபுரம் பகுதியில் 40 சென்ட் இடம் உள்ளது. அந்நிலத்தை ஆள்மாறாட்டம் செய்து போலி ஆவணம் மூலம் வேறு ஒருவருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதேபோல் ராதாபுரம், தெற்கு கள்ளிகுளம் பகுதியைச் சேர்ந்த அன்னாள் செலின் மெர்டில்டா ராணி என்பவருக்கு சொந்தமான இடம் ராதாபுரம் சமூகரெங்கபுரம் பகுதியில் 80 சென்ட் இடம் உள்ளது. அவ்விடத்தை ஆள்மாறாட்டம் செய்து போலி ஆவணம் மூலம் வேறு ஒருவருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. மேற்கண்ட நபர்கள் தனது நிலத்தினை மீட்டுத்தருமாறு *திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ப.சரவணன், இ.கா.ப.,* அவர்களிடம் மனு அளித்திருந்தனர். அம்மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி, *திருநெல்வேலி மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் திரு.ஜெயபால் பர்ணபாஸ்* அவர்களுக்கு உத்தரவிட்டதன் பேரில் *நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு ஆய்வாளர் திருமதி. சாந்தி அவர்கள், உதவி ஆய்வாளர் திருமதி. தனலெட்சுமி.* அவர்கள் தலைமையிலான தலைமைக் காவலர் திரு. நாகராஜன், முதல் நிலை காவலர் திரு.கணேசன், திரு.சண்முகம், இரண்டாம் நிலை காவலர் திரு. அய்யாதுரை ஆகியோர் தீவிர விசாரணை மேற்கொண்டு ரூபாய் 52 இலட்சம் மதிப்பிலான நிலத்தினை மீட்டு அதற்கான ஆவணத்தை *திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ப.சரவணன், இ.கா.ப.,* அவர்கள் நில உரிமையாளர்களான ஜெயந்திரன் V.மணி, தீபன், மணிகண்ட மோகன், அன்னாள் செலின் மெர்டில்டா ராணி ஆகியோருக்கு மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து வழங்கினார்.


*இவ்வழக்கில் திறம்பட விசாரணை மேற்கொண்டு ரூபாய் 52 இலட்சம் மதிப்புள்ள நிலங்களை மீட்டு நிலத்தின் உரிமையாளர்களிடம் ஒப்படைத்த திருநெல்வேலி மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் மற்றும் காவல் துறையினரை திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ப.சரவணன் , இ.கா.ப., அவர்கள் வெகுவாகப் பாராட்டினார்.*

9 views0 comments
bottom of page