top of page

6-ம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை உள்ள பள்ளி மாணவ மாணவிகளுக்கான கவிதை மற்றும் கட்டுரை போட்டி...

சுதந்திர தின வைர விழாவை முன்னிட்டு நெல்லை அரசு அருங்காட்சியகம் சார்பாக ஏராளமான நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. அவற்றுள் ஒன்றாக தமிழ் அஞ்சல் நாளிதழ் குழுமம், , மெர்சி ராஜன் டிரஸ்ட் மற்றும் முகநூல் நண்பர்கள் குழு இணைந்து 6-ம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை உள்ள பள்ளி மாணவ மாணவிகளுக்கான மாபெரும் கவிதை மற்றும் கட்டுரை போட்டி நடத்த திட்டமிடப்பட்டுள்ளன.

6,7,8 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு “இந்திய விடுதலைப்போராட்டத்தில் தமிழகத்தின் பங்கு” என்கிற தலைப்பிலும், 9,10 ஆம் வகுப்பு பயிலும் மாணவ-மாணவிகளுக்கு “இந்திய விடுதலைப் போராட்டத்தில் நெல்லை மாவட்டத்தின் பங்கு” என்கிற தலைப்பிலும் கட்டுரைப்போட்டி நடைபெறும். 11,12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு “ ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமே” என்கிற தலைப்பில் கவிதைப்போட்டியும் செப்டம்பர் 18-ஆம் தேதி காலை 10 மணிக்கு நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் நடைபெற உள்ளது. போட்டியில் எழுதுவதற்கு தேவையான தாள்கள் அருங்காட்சியகத்தில் வழங்கப்படும். மாணவர்கள் தங்களுக்கு தேவையான அட்டை, எழுது பொருள்கள் ஆகியவற்றை எடுத்து வர வேண்டும்

இப்போட்டிகளில் சிறந்த 3 வெற்றியாளர்களுக்கு பரிசுகளும் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ்களும் வழங்கப்படும். மேற்கண்ட போட்டிகளின் பரிசளிப்பு விழா செப்டம்பர் 19-ஆம் தேதி மாலை 6 மணிக்கு நெல்லை அரசு அருங்காட்சியக வளாகத்தில் உள்ள திறந்த நிலை கலையரங்கில் நடைபெறும்.. மேலும் விவரங்களுக்கு 9444973246 என்கிற வாட்ஸ்அப் எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என நெல்லை மாவட்டக் காப்பாட்சியர் திருமதி சிவ.சத்தியவள்ளி தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

0 views0 comments
bottom of page