பாளையில் சுகாதாரமற்ற வகையில் நோய் பரவும் விதத்தில் இருந்த கண்ணாடி பீங்கான் தம்ளர்கள் பறிமுதல்..




நெல்லை மாநகராட்சி ஆணையாளர் கண்ணன் அதிரடி .. பாளையில் சுகாதாரமற்ற வகையில் நோய் பரவும் விதத்தில் இருந்த கண்ணாடி பீங்கான் தம்ளர்கள் பறிமுதல்.. பொதுமக்கள் பாராட்டு..
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மாவட்ட மாவட்ட நிர்வாகமும் மாநகராட்சி நிர்வாகமும் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில்
நெல்லை மாநகராட்சி ஆணையாளர் திரு.கண்ணன் அவர்களின் உத்தரவு படி கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக பாளை மண்டல உதவி ஆணையாளர் பிரேம் ஆனந்த் தலைமையில் சுகாதார ஆய்வாளர் நடராஜன் மேற்பார்வையாளர் முருகன் தூய்மை இந்தியா மேற்பார்வையாளர் கனகப்ரியா ஆகியோர் பாளையம்கோட்டை ஹைகிரவுண்ட் அரசு மருத்துவமனை பகுதியில் உள்ள கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின் போது உணவகங்கள், தேநீர் கடைகளில் சுகாதாரமற்ற முறையில் கழுவாமல் நோய் பரவக்கூடிய விதத்தில் தேநீர் வழங்கிய தம்ளர்கள் அதிரடியாக பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அனைத்து கடைகளிலும் சமூக இடைவெளி பின்பற்ற கடைகளின் முன்பு கயிறு கட்ட அறிவுரை வழங்கப்பட்டது.
News sponser : https://lapureherbals.in/
