1000 படுக்கையறை கொண்ட கல்லூரியில் 600 படுக்கை ஆக்சிஜன் வசதியுடன் உள்ளது - மருத்துவக்கல்லூரி முதல்வர்






நெல்லை அரசு மருத்துவக்கல்லூரியில் செயல்படும் பரிசோதனை மூலம் இதுவரை 29,723 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்ததில் 628 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, நெல்லை மாவட்டத்தில் மட்டும் 18,518 பேருக்கு சோதனை செய்யப்பட்டதில் 471 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டு அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு குணம்மடைந்துள்ளனர் , பிளாஸ்மா சிகிச்சை அளிப்பதற்கும் மருத்துவமனை தயார் நிலையில் உள்ளதாக மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்
இதுகுறித்து நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் ரவிச்சந்திரன் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை கூட்டரங்கில் வைத்து செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்
நெல்லை அரசு மருத்துவக்கல்லூரியில் நெல்லை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 509 பேருக்கு கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இதில் 3 பேர் சிறுநீரகம் பாதிக்கப்பட்டவர்கள் , 2 பேர் கர்ப்பிணி பெண்கள் ஆகியோரும் கொரோனா சிகிச்சை பெற்று நலமுடன் வீடு திரும்பியுள்ளனர் தற்போது 54 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் . நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் செயல்படும் பரிசோதனை மையத்தில் நெல்லை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 29,723 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு அதில் 628 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது, நெல்லை மாவட்டத்தில் மட்டும் 18, 518 பேருக்கு பரிசோதனை மேற்கொண்டதில் 471 பேருக்கு நோய் கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. நாள் ஒன்றுக்கு மாவட்டத்தில் 700 முதல் 900 வரை பி.சி.ஆர் பரிசோதனை செய்யப்படுகிறது. மருத்துவமனையைப் பொறுத்தவரையில் 1000 படுக்கை கொண்டது, இங்கு 600 படுக்கைகள் ஆக்சிஜன் வசதியுடன் உள்ளது, 19, 500 லிட்டர் ஆக்சிஜன் சிகிச்சைக்கு தயாராக வைக்கப்பட்டுள்ளது.தொற்று பாதிக்கப்பட்ட குறைந்த வயதுடையா 2 மாதக் குழந்தைக்கும் , அதிக பட்சம் 83 வயதானவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் நமது மருத்துவமனை பிளாஸ்மா சிகிச்சை அளிக்கவும் தயாராக உள்ளது என தெரிவித்தார் .
மேலும் கூறுகையில் நெல்லை மாவட்டத்தில் இன்று 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் , 8 பேர் கொரோன தொற்றில் இருந்து குணம் அடைந்து வீடுதிரும்பியுள்ளனர் எனவும் கூறினார் .
News sponser : https://lapureherbals.in/
