தமிழக விவசாயிகளுக்கு இலவசமின்சாரம் வழங்கும் திட்டம்...3000 ஆவது இணைப்பு வழங்கும் நிகழ்ச்சி...



தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பாக மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களால் 24.09.2021 அன்று ஒரு லட்சம் தமிழக விவசாயிகளுக்கான மின்சாரம் வழங்கும் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது .அதன் தொடர்ச்சியாக தமிழகம் முழுவதும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பாக தமிழக விவசாயிகளுக்கு மின்சாரம் வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. அதன் பயனாக திருநெல்வேலி மின் பகிர்மான வட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கு 1283 ஐ தாண்டி 3000 ஆவது இலவச மின்சாரம் வழங்கும் நிகழ்ச்சி நாங்குநேரியில் நடைபெற்றது .இதில் திருநெல்வேலி மண்டல தலைமை மின் பொறியாளர் திரு கி.செல்வகுமார் கலந்துகொணடு நாங்குநேரி தாலுகா ஸ்ரீ ரங்கராஜபுரம் கிராத்தில் உள்ள விவசாயி திரு ராஜேஷ் த/பெ திரு ராமசுந்தரம் அவர்களுக்கு ( மின் இணைப்பு எண் 024 - 011- 1269 ) 24.03.2022 அன்று வழங்கினார்கள் இந்நிகழ்ச்சியில் திருநெல்வேலி மின்பகிர்மான வட்ட மேற்பார்வை மின் பொறியாளர் திரு எஸ். ராஜன் ராஜ் திருநெல்வேலி மின்பகிர்மான வட்ட செயற்பொறியாளர் ( பொது )திரு ந. வெங்கடேஷ் மணி கிராமப்புற கோட்ட செயற்பொறியாளர் திரு வ.முத்தரசு உதவி செயற்பொறியாளர் நாங்குநேரி திரு செ. ஜெயசீலன் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்