கொரோனா ஊரடங்கால் சிரமப்படும் மக்களுக்காக இலவச பேருந்துகளை இயக்கும் தனியார் பேருந்து நிறுவனம்...
தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலையை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது எஸ். எஸ். ஆர். பி. எஸ்(SSRBS) தனியார் பேருந்து நிறுவனம். இந்த தனியார் போக்குவரத்து நிறுவனம் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் இருந்து திருநெல்வேலி, தென்காசி, சங்கரன்கோவில் உள்ளிட்ட பகுதிகளுக்கு தங்களது பேருந்துகளை இயக்கி வருகிறது.
தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று பரவலை தடுக்கும்விதமாக 5 கட்டமாக 144 ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக முதல் 4 கட்ட ஊரடங்கின்போது பொது போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. 5 வது கட்ட ஊரடங்கில் பல்வேறு நிபந்தனைகளுடன் பொதுப்போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதனையடுத்து மண்டலங்களுக்குள் அரசுப்பேருந்துகள் மட்டும் இயக்கப்பட்டது. ஆனால் தமிழகம் முழுவதும் உள்ள தனியார் பேருந்துகள் இயக்கப்படவில்லை.
இந்த நிலையில் எஸ் எஸ் ஆர் பி எஸ் தனியார் பேருந்து நிறுவனம் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பொதுமக்களின் பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு தங்களது பேருந்துகளை இலவசமாக இயக்க முடிவு செய்தது. அதன்படி முதற்கட்டமாக கோவில்பட்டியில் இருந்து தென்காசி வழித்தடத்தில் பொது மக்களுக்கான இலவச பேருந்து சேவையை தொடங்கியது. பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததையடுத்து சங்கரன்கோவில் to திருநெல்வேலி மற்றும் கோவில்பட்டி சுற்றுவட்டாரத்தில் உள்ள ஏழு வழித்தடங்களில் இலவச பேருந்து சேவையை தொடங்கியுள்ளனர். இந்த இலவச பேருந்து சேவை பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்திலிருந்து சங்கரன்கோவிலுக்கு காலை 8 மணிக்கும் மதியம் 2 மணிக்கு இந்த இலவச பேருந்து செல்கிறது. தேவைப்படுபவர்கள் இந்த இலவச பேருந்து சேவையை பயன்படுத்திக்கொள்ளவும்...



News sponser : https://lapureherbals.in/
