காசநோயாளியின் குடும்பத்திற்க்கு உணவுப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி...

தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு காசநோய் பிரிவிற்க்கு உட்பட்ட ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள கால்வாய் கிராமத்தில் நம்பி (வயது.72) என்பவர் காசநோய்க்காகவும் மற்றும் நாட்பட்ட நுரையீரல் அடைப்புக்காகவும் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் 03.07.2022 அன்று மரணமடைந்தார்.
நோயாளியின் குடும்பத்தின் ஏழ்மை நிலையை கருத்தில் கொண்டு கடம்பூர் முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் *திரு.கு.காசி விஸ்வநாதன்* அவர்களின் முயற்சியில், காஞ்சிபுரத்தை சேர்ந்த *திரு.ஸ்ரீதர்* என்ற தன்னார்வலர் மூலம் வழங்கப்பட்ட ஒரு மாதத்திற்க்கு தேவையான அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட பலசரக்கு பொருட்கள் அடங்கிய தொகுப்பினை வல்லநாடு காசநோய் பிரிவு முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் *திரு.அ.அப்துல் ரஹீம் ஹீரா* அவர்கள் கால்வாய் கிராமத்தில் உள்ள நோயாளியின் வீட்டிற்கு சென்று *13.07.2022* இன்று வழங்கினார்.