திருநெல்வேலி மாவட்டத்தில் துணை ராணுவப் படையினரின் கொடி அணிவகுப்பு...






திருநெல்வேலி மாவட்டத்தில் வருகின்ற சட்ட மன்ற தேர்தல் பாதுகாப்பை முன்னிட்டு *திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. நெ. மணிவண்ணன் இ.கா.ப..,அவர்கள்* உத்தரவின்படி *திருநெல்வேலி ஊரக உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திருமதி அர்ச்சனா அவர்கள்* தலைமையில் துணை ராணுவப் படையினரின் கொடி அணிவகுப்பு கங்கைகொண்டான், சீவலப்பேரி, தாலூகா,சிவந்திப்பட்டி, காவல்நிலைய எல்லைகுட்பட்ட பகுதிகளில் நடைபெற்றது.
இந்த கொடி அணிவகுப்பு கங்கைகொண்டான் காவல் நிலையத்தில் இருந்து தொடங்கி,பஜார் மற்றும் முக்கிய சாலை வழியாக சென்றும் பின்
அனைதலையூர் பேருந்து நிறுத்தம் முக்கிய தெருக்களில் சென்றும் பின் துறையூர் பேருந்து நிறுத்தம் வழியாக முக்கிய பகுதிகளுக்கு சென்று பேருந்து நிறுத்தத்தில் நிறைவு பெற்றது.
மேலும் சீவலப்பேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சீவலப்பேரி பஜாரில் தொடங்கி முக்கிய வீதிகள் வழியாக சென்று பாளையங்கோட்டை சாலை வழியாக குறுக்குசாலை ரோட்டு பகுதியில் கொடி அணிவகுப்பு நிறைவடைந்தது.
மேலும் தாலுகா காவல் நிலையத்தில் இருந்து தொடங்கி கீழநத்தம், வடக்கூர், தெற்கூர் மற்றும் KTC நகர் மங்கம்மா சாலை ரயில் கொடி அணிவகுப்பு நடைபெற்றது. பின் சிவந்திப்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிருஷ்ணாபுரம சோதனைச்சாவடியில் இருந்து தொடங்கி பெருமாள் கோயில் மற்றும் முக்கிய தெருக்கள் வழியாக வந்து நொச்சிகுளம் பகுதியில் நிறைவடைந்தது.
இக்கொடி அணிவகுப்பில் *காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் எல்லை பாதுகாப்பு படையினர் 60 மற்றும் உள்ளூர் போலீசார் உட்பட 100 பேர்* கலந்து கொண்டனர்.