தீயணைப்புத்துறையோடு இணைந்து பணியாற்றும் தன்னார்வலர்களுக்கு பயிற்சி...








தீயணைப்பு துறை இயக்குனர் முனைவர் திரு. சைலேந்திரபாபு ஐபிஎஸ் அவர்களின் உத்தரவுப்படி தென் மண்டல துணை இயக்குனர் முனைவர் சரவணகுமார் அவர்களின் வழிகாட்டுதலின் படியும் திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்ட தீயணைப்பு அலுவலர் மகா லிங்க மூர்த்தி தலைமையில் உதவி மாவட்ட அலுவலர் சுரேஷ் ஆனந்த் ஒருங்கிணைப்பில் அனைத்து நிலை அலுவலர்கள் பணியாளர்கள் முன்னிலையில் இன்று 8/10/20 பாளையங்கோட்டை தீயணைப்பு நிலையத்தில் திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்ட பகுதியில் உள்ள தன்னார்வலர்களுக்கு இன்று வடகிழக்கு பருவமழையை முன்னிட்டும் மற்றும் இதர பேரிடர் காலங்களில் தீயணைப்புத்துறையோடு இணைந்து எவ்வாறு பணியாற்ற வேண்டும் என்பது பற்றியும் எடுத்துரைக்கப்பட்டது. அதில் தீ விபத்து காலங்களில் அந்த பகுதியில் உள்ள தன்னார்வலர்கள் தீயணைப்புத் துறைக்கு எவ்வாறு உதவி புரிய வேண்டும் என்பது பற்றியும், மழை வெள்ள காலங்களில் தீயணைப்புத்துறை விபத்திற்கு வருமுன்பே பொது மக்களை அன்றாடம் பயன்படுத்தக்கூடிய பொருட்களை மிதவை பொருட்களாக மாற்றி மனித உயிர்கள் மற்றும் விலங்கினங்களை எவ்வாறு மீட்பது, மேலும் தீயணைப்பு துறை கயிறுகள் மூலம் உயரமான இடத்தில் உள்ளவர்களையும் தாழ்வான இடத்தில் உள்ள மனிதர்கள் மற்றும் பிற உயிரினங்களை எவ்வாறு பாதுகாப்புடன் மீட்பது பற்றியும், திருநெல்வேலி மருத்துவ கல்லூரி மருத்துவமனை எலும்பு முறிவு அறுவை சிகிச்சை துறை உதவி பேராசிரியர் மருத்துவர் பிரேம் நிவாஸ் தனது குழுவினருடன் விபத்து நிகழ்ந்த இடத்தில் முதல் உதவிகள் வழங்குவது பற்றியும் செய்முறை விளக்கம் மற்றும் பயிற்சிகள் வழங்கப்பட்டது.