நெல்லை மாவட்ட ரஜினி மக்கள் மன்றம் சார்பில் கொரோனா ஒழிப்பு நடவடிக்கை ...





நெல்லை மாவட்ட ரஜினி மக்கள் மன்றம் சார்பில் கொரோனா ஒழிப்பு நடவடிக்கையாக கிருமி நாசினியை மாவட்ட இணைச் செயலாளர் பாலகிருஷ்ணன் பாளையங்கோட்டை தீயணைப்பு நிலைய அதிகாரி வீரராஜ் அவர்களிடம் வழங்கினார். தகவல் தொழில் நுட்ப பிரிவு செயலாளர் கோமதி சங்கர், பாளை ஒன்றிய செயலாளர் ரங்கா பாலன், மாநகர துணைச்செயலாளர் ரஜினி வீரமணிகண்டன், சூரியா மாரியப்பன், செயற்குழு உறுப்பினர் சூரியா கணேசன், ஜேசுராஜ், மாநகர செயலாளர் கண்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். பின்னர் பாளையங்கோட்டை , நெல்லை சந்திப்பு, நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவில் ரதவீதி உள்ளிட்ட பகுதிகளில் தீயணைப்பு வாகனம் மூலம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.