தென்மேற்கு பருவமழையின்போது வெள்ளத்தில் பாதுகாத்துக்கொள்வது குறித்த தற்காப்பு போலி பயிற்சி ஒத்திகை..
தென்மேற்கு பருவமழை 2021 முன்னிட்டு திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அவர்களின் உத்திரவு படி, திருநெல்வேலி தீயணைப்பு துறை மாவட்ட அலுவலர் அவர்களது வழிகாட்டுதலின் படி திருநெல்வேலி வண்ணாரப்பேட்டை தாமிரபரணி ஆற்றின் பேராட்சி செல்வி கோவில் திடலில் வைத்து பருவ மழையின் போது திடீர் வெள்ளம் ஏற்பட்டால் எவ்வாறு பொதுமக்கள் தங்களைக் காப்பாற்றிக் கொள்வது அல்லது தீயணைப்பு துறையின் உதவியை விரைந்து எவ்வாறு பெறுவது தீயணைப்பு துறை வருவதற்கு முன்பாகவே தங்கள் இல்லங்களில் அல்லது சுற்றுப்புறங்களில் உள்ள பொருட்களை வைத்து அதனை மிதவை பொருட்களாக மாற்றி தன்னையும் தனது குடும்பத்தினரையும் அல்லது மாற்றுத்திறனாளிகள், வயதானவர்களை, சிறுவர்களை, கால்நடைகளை எவ்வாறு மீட்பது என்பது குறித்து செயல்முறை விளக்க போலி ஒத்திகை பயிற்சி நடத்தப்பட்டது இந்நிகழ்ச்சியில் பாளையங்கோட்டை நிலைய அலுவலர் வீரராஜ் மற்றும் பணியாளர்கள் பாளையங்கோட்டை வட்டாட்சியர், துணை வட்டாட்சியர்,வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய்த்துறையினர் பலர், தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் சமூக பாதுகாப்பு இடைவெளியோடு கலந்து கொண்டார்கள்.