தென்காசி மாவட்டம் மத்தளம்பாறை மாறனேரி குளத்தில் மூழ்கி உயிரிழந்தவர் உடல் மீட்பு...





தென்காசி மாவட்டம் மத்தளம்பாறை பகுதியைச் சேர்ந்தவர் பால்ராஜ். நேற்று மாலை இவர் மத்தளம்பாறையை அடுத்துள்ள மாறனேரி குளத்தில் குளிக்க சென்றபோது எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தார். இதுகுறித்தது தகவல் கிடைத்ததும் தென்காசி தீயணைப்பு மற்றும் மீட்ப்புறத்துறையினர் சம்பவ இடைத்ததுக்கு விரைந்து சென்று நீரில் மூழ்கிய பாலராஜின் உடலை தேடினார்கள். நேற்று மாலை இருட்டிவிட்டதால் உடலை மீட்கமுடியாத நிலையில். நெல்லை மாவட்டம் பாளையம்கோட்டை தீயணைப்பு நிலையத்தில் உள்ள தீயணைப்பு மற்றும் மீட்ப்பு நடவக்கையில் சிறப்பு பயிற்சசிபெற்ற கமாண்டோ படையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்படி இன்று காலை சிறப்பு பயிற்சிபெற்ற கமாண்டோ படையினர் மற்றும் தென்காசி தீயணைப்பு நிலைய வீரர்கள் நீரில் மூழ்கிய பாலராஜின் உடலை மாறனேரி குளத்தில் இருந்து மீட்டனர்.