நெல்லை அருகே ஓடும் வேனில் தீ விபத்து ... ஓட்டுனரின் சாமர்த்தியத்தால் அனைவரும் உயிர் தப்பினர்....
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூரில் இருந்து கன்னியாகுமரிக்கு கோவில் கொடை விழா சம்பந்தமாக தீர்த்தம் எடுப்பதற்காக 12 ஆண்கள் மற்றும் இரண்டு பெண்கள் மற்றும் டிரைவருடன் சேர்த்து 15 பேர் ஒரு வேனில் பயணம் செய்தனர்.



வண்டி அதிகாலை 3.30 மணிக்கு நெல்லை புதிய பேரூந்துநிலையம் தாண்டி கன்னியாகுமரி நோக்கி செல்லும் வழியில் டக்கரம்மாள்புரம் செக்போஸ்ட அருகே சென்ற போது என்ஜின் உள்ளிருந்து புகை வந்துள்ளது.
உடனடியாக சுதாரித்த டிரைவர் கணேசன் வண்டியை ரோட்டின் ஓரமாக நிறுத்திவிட்டு பார்க்கும் பொழுது வண்டி தீ பிடிக்கத் தொடங்கியது. பின்னர் பாளையம்கோட்டை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
பாளையங்கோட்டை தீயணைப்பு நிலைய வீரர்கள் மாவட்ட அலுவலர் கணேசன், உதவி மாவட்ட அலுவலர் வெட்டும் பெருமாள், நிலைய அலுவலர் ராஜா ஆகியோர் தலைமையில் விரைந்து சென்று தீயை அணைத்தனர். டிரைவரின் கவனத்தினால் அனைவரும் காயமின்றி உயிர் தப்பினர்...