top of page

கொரோனா நோய்த்தொற்று பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் காய்ச்சல் தடுப்பு முகாம்...

Updated: Jul 18, 2020

திருநெல்வேலி மாநகராட்சி சார்பில் மாநகரில் கொரோனா நோய்த்தொற்று பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் காய்ச்சல் தடுப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவரது வீடு இருக்கும் பகுதியில் உள்ள மற்ற வீட்டில் உள்ளவர்களுக்கு உடல் வெப்ப சோதனை, ஆக்சிஜன் அளவு, பல்ஸ் போன்றவை இந்த முகாமில் பரிசோதிக்கப்படுகிறது. முகாமின் போது உடல் வெப்பநிலையில் வேறுபாடு உள்ளவர்கள் கண்டறியப்படும் போது அவர்கள் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பரிசோதனை செய்வதற்காக அனுப்பி வைக்கப்படுகிறார்கள்.

மேலப்பாளையம் மண்டலத்திற்கு உட்பட்ட என்.ஜி.ஓ காலனியிலுள்ள வருங்கால வைப்பு நிதி அலுவலக ஊழியர்கள் குடியிருப்பு பகுதி மற்றும் தியாகராஜ நகர் 8வது தெரு பகுதியில் இன்று பெருமாள்புரம் நகர்புற

ஆரம்ப சுகாதாரநிலையம் சார்பில் காய்ச்சல் தடுப்பு முகாம் நடைபெற்றது. இதில் பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவக்கல்லூரி மருத்துவர்கள் சாம், நந்தினி, சுவாதி, பத்மபிரியா மற்றும் கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்கள் கலந்துகொண்டனர்...









45 views0 comments
bottom of page